Published:Updated:

``டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக திமுக தேர்தல் வாக்குறுதி அளிக்கவில்லை!" - செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

`தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைக்கப்படும் எனவும் தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சொல்லவில்லை.' - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதம் வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், இன்று எரிசக்தித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

அப்போது மதுவிலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``அரசுக்கு 2021 - 2022-ல் டாஸ்மாக் வருவாய் 36.013 கோடி ருபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மார்ச் மாதம் வரை ரூபாய் 2,200 கோடி டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாஸ்மாக்
டாஸ்மாக்

மேலும், தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைக்கப்படும் எனவும் தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சொல்லவில்லை. மேலும், தமிழகத்தில் 5,350 டாஸ்மாக் கடைகள் உள்ளன. புதிய டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. மக்களின் எதிர்ப்பால் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் தான் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன." எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism