Published:Updated:

வானதி சீனிவாசன்: `உங்க பெயர் லிஸ்ட்ல இல்லை..!’ - மாறிய வாக்குச்சாவடி; நடந்தது என்ன?

வானதி சீனிவாசன்

கடந்த சில தினங்களாகக் கோவையில் நடைபெறக்கூடிய அத்துமீறல்களும், பணம், பரிசுப் பொருட்கள், ஹாட் பாக்ஸ், கொலுசு போன்றவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, அதன் பின்பு வாக்கு சேகரிப்பது நடைபெற்றுள்ளது - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்: `உங்க பெயர் லிஸ்ட்ல இல்லை..!’ - மாறிய வாக்குச்சாவடி; நடந்தது என்ன?

கடந்த சில தினங்களாகக் கோவையில் நடைபெறக்கூடிய அத்துமீறல்களும், பணம், பரிசுப் பொருட்கள், ஹாட் பாக்ஸ், கொலுசு போன்றவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, அதன் பின்பு வாக்கு சேகரிப்பது நடைபெற்றுள்ளது - வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்

பா.ஜ.க-வின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வாக்களிப்பதற்காகக் கோவையில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். ஆனால், அங்கு உள்ள வாக்குச்சாவடியில் அவருடைய பெயரும் அவருடைய வாக்காளர் எண்ணும் இல்லை என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகாரளித்ததைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம், வாக்காளர் சரிபார்ப்பு இணையதளத்தில் தேடிப்பார்த்தது. அதில், கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதியிலுள்ள கோயம்புத்தூர் மலையாளிகள் சமாஜம் பள்ளியில் அவருக்கான வாக்குச்சாவடி இருப்பது தெரியவந்தது. உடனே அங்குச் சென்று வானதி சீனிவாசன் தனது மகனுடன் வாக்களித்தார்.

கோவை தி.மு.க
கோவை தி.மு.க

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வானதி சீனிவாசன், ``வாக்களிப்பது நம்முடைய ஜனநாயக கடமை. ஜனநாயக கடமையை அனைத்து வாக்காளர்களும் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். அரசியலில் நமக்காகப் பணி செய்யக்கூடிய வேட்பாளர்களை நாம் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும்.

கோவை மாவட்டம் தமிழக அரசியலின் மிக முக்கிய புள்ளியாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களாகக் கோவையில் நடைபெறக்கூடிய அத்துமீறல்களும், வாக்காளர்களின் கையில் கொடுக்காமல், அவர்களின் வீட்டுக்குள்ளேயே பணம், பரிசுப் பொருட்கள், ஹாட் பாக்ஸ், கொலுசு போன்றவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, அதன் பின்பு வாக்கு சேகரிப்பது போன்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வானதி ஸ்ரீனிவாசன்
வானதி ஸ்ரீனிவாசன்

ஆனால், அதையும் மீறி பொது மக்கள் நல்லவர்களுக்கும் தூய்மையானவர்களுக்கும் வாக்களிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சில இடங்களில் வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள். பிரசாரத்திற்கு சென்றவர்கள் மிரட்டப்படுகிறார்கள். நேற்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இது தொடர்பாகப் பெரிய போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தனையும் கடந்து இந்த தேர்தல் கோவையின் மான பிரச்னையாக மாற்றப்பட்டுள்ள தேர்தல். எனவே, கோவை மக்கள் மிகச் சரியாக முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்று என்னுடைய தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஹாட்பாக்ஸ் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்டு வாக்குச் செலுத்த வைத்துள்ளனர். காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையும் தாண்டி ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இந்த தேர்தல் நியாயமாக நடக்குமா? என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் எந்தவித கவனமும் செலுத்தாமல், அரைகுறையாக இந்த தேர்தலை நடத்துகிறது. தேர்தல் ஆணையம் சரியான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. என்னுடைய வாக்குச்சாவடி மையம் இன்னொரு பள்ளியில் காண்பிக்கிறது. அதன் பின்பு அந்த வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டியதாக உள்ளது. எத்தனை மக்கள் பொறுமையாகத் தேடிச் சென்று தங்களது வாக்கைச் செலுத்துவார்கள் என்பதும் சந்தேகமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism