Published:Updated:

``மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது!” - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் உற்சவத்தில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்பதைப் பார்க்கும்போது மக்கள் கட்டுப்பாட்டோடு இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. திருவிழாக்களுக்கு அனுமதி அளித்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்” என்றார்.

``மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது!” - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

இதைத் தொடர்ந்து பேசிய அவர், ``நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கும் முழு அதிகாரம் உள்ளது. ஆளுநர் சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். சபாநாயகர் திரும்ப இது குறித்து முடிவெடுக்கலாம். `ஆளுநர்கள் கைப்பாவைகளாக உள்ளனர். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிராக இருப்பார்கள்’ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அனைத்து ஆளுநர்களுமே திறமைசாலிகள்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆளுநர் அவரின் உரிமையைப் பயன்படுத்தியுள்ளார். மக்களுக்கு நல்லது இல்லை என்றாலும், ஒரு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பலாம். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக, தமிழக ஆளுநர் நடந்தார் என்பது சரியானது இல்லை" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism