Published:Updated:

`நான்தான் கவுன்சிலர்,என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ’ -வைரல் வீடியோ; திமுக கவுன்சிலரின் கணவர் சஸ்பெண்ட்

திமுக கவுன்சிலர் கணவர்

சென்னையில் காவல்துறையினரோடு பிரச்னையில் ஈடுபட்ட திமுக பெண் கவுன்சிலரின் கணவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

`நான்தான் கவுன்சிலர்,என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ’ -வைரல் வீடியோ; திமுக கவுன்சிலரின் கணவர் சஸ்பெண்ட்

சென்னையில் காவல்துறையினரோடு பிரச்னையில் ஈடுபட்ட திமுக பெண் கவுன்சிலரின் கணவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
திமுக கவுன்சிலர் கணவர்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியது. சென்னையில் பல இடங்களில் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவர்களின் கணவர்கள் ஆதிக்கம் செலுத்தி கவுன்சிலர்போல வலம்வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சென்னை 16-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி, அந்தப் பகுதியில் வீடு கட்டும் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் என்ற சர்ச்சை பெரும் பேசுபொருளாக மாறியது.

திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்
திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்

அந்த சர்ச்சை தணிவதற்கு முன்பாகவே சென்னையைச் சேர்ந்த பெண் கவுன்சிலரின் கணவர் ஒருவர் காவல்துறையினரோடு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை ராயபுரம் பகுதியிலுள்ள 51-வது வார்டு கவுன்சிலராக தி.மு.க-வைச் சேர்ந்த நிரஞ்சனா வெற்றிபெற்றிருந்தார். இவரின் கணவர், ஜெகதீசன். இவர் தி.மு.க உறுப்பினராகவும், சென்னை வடக்கு மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றச் செயலாளராகவும் இருந்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரவு, பகல் என்று அந்தப் பகுதியில் கவுன்சிலருக்கு பதிலாக ஜெகதீசன்தான் வார்டில் வலம்வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெகதீசன் ராயபுரம் ஜே.பி.கோயில் தெருவில் இரவு நேரத்தில் அவரின் ஆதரவாளர்கள் சிலருடன் நின்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த காவல்துறையினர், `இந்த நேரத்தில் ஏன் கும்பலாக நிற்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு, `நான்தான் கவுன்சிலர்’ என்று கூறி போலீஸாரோடு அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. ஜெகதீசனிடன் காவல்துறையினர் கேள்வி கேட்கவே, அவருடன் இருந்தவர்களோ, காவல்துறையினரைத் தகாத வார்த்தைகளில் திட்டியதாகச் சொல்லப்படுகிறது.

திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்
திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்

``நான்தான் கவுன்சிலர் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்றும், `வா மோதிப் பார்த்துக்கலாம்’ என்றும் காவல்துறையினரைச் சண்டைக்கு அழைக்கும் தொனியில் ஜெகதீசன் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து, கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகவும், ஜெகதீசனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாகவும் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism