Published:Updated:

மிரட்டும் யோகியின் புல்டோசர் அரசியல்... தாக்கங்கள் என்னென்ன?

முதல்வர் யோகி

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பிரச்னைகளை எதிர்கொள்வதைக் காட்டிலும், புல்டோசர் மூலமாகப் பிரச்னைகளை எதிர்கொள்வது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எளிதாக இருக்கிறது.

மிரட்டும் யோகியின் புல்டோசர் அரசியல்... தாக்கங்கள் என்னென்ன?

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பிரச்னைகளை எதிர்கொள்வதைக் காட்டிலும், புல்டோசர் மூலமாகப் பிரச்னைகளை எதிர்கொள்வது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எளிதாக இருக்கிறது.

Published:Updated:
முதல்வர் யோகி

கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களை அச்சுறுத்திவரும் ‘புல்டோசர் அரசியல்’, தற்போது உத்தரப்பிரதேசத்தில் மையம்கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, இஸ்லாமியர்களின் போற்றுதலுக்குரிய முகமது நபிகள் குறித்துத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு உலக அளவில் கண்டனம் எழுந்தது.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்ய வலியுறுத்தி உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. ஜூன் 10-ம் தேதியன்று, நுபுர் ஷர்மாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பிரயாக்ராஜ் உட்பட ஆறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், கல்வீச்சும் நடைபெற்றது. வன்முறையில் ஈடுபட்டதாக 227 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரயாக்ராஜில் நடந்த வன்முறைக்குக் காரணமானவர் என்று கூறி ஜாவத் அகமது என்பவரைக் காவல்துறை கைதுசெய்தது. பின்னர், பிரயாக்ராஜில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி ஜாவத் அகமதுவின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்தது.

புல்டோசர் கொண்டு குடியிருப்புகள் அகற்றம்
புல்டோசர் கொண்டு குடியிருப்புகள் அகற்றம்

ஏற்கெனவே, டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் ராமநவமி ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் வசிக்கும் ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதாகக் கூறி புல்டோசர் மூலமாக வீடுகளும் கடைகளும் இடிக்கப்பட்டன. பா.ஜ.க அதிகாரத்தில் இருக்கும் டெல்லி வடக்கு மாநகராட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு ஆளானது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலும், நோட்டீஸ் வழங்காமலும் காவல்துறையினரை அந்தப் பகுதியில் குவித்து, புல்டோசரைக் கொண்டுவந்து வீடுகளையும் கடைகளையும் அதிகாரிகள் இடித்தனர். அதனால், மக்கள் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்தனர். ஜஹாங்கிர்புரியில் புல்டோசர்களைக் கொண்டு இடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கிய பிறகும் இடிப்பு நடவடிக்கை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது, உத்தரப்பிரதேசத்தில் புல்டோசர் அரசியல் உச்சத்தில் இருக்கிறது. ஏற்கெனவே, ‘கிரிமினல்கள், மாஃபியா’க்களின் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை புல்டோசர்கள் மூலம் தகர்க்கும் நடவடிக்கையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு பல மாதங்களாக மேற்கொண்டுவருகிறது. முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்ய வேண்டுமென்று நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் புல்டோசர் அரசியல் வேகமெடுத்திருக்கிறது.

அஃப்ரீன் ஃபாத்திமா
அஃப்ரீன் ஃபாத்திமா

உத்தரப்பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர் என்று கருதப்படும் ஜாவத் அகமது என்பவரின் வீட்டை புல்டோசரால் அதிகாரிகள் இடித்திருக்கின்றனர். விதிமுறைகளை மீறி வீடு கட்டப்பட்டிருப்பதாக மே 10-ம் தேதி ஜாவத் அகமதுவுக்கு பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாகவும், உரிய பதில் அளிக்கப்படாததால் வீட்டை இடிக்க மே 25-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். ஜாவத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டதற்கு முந்தைய நாள், ஷஹரான்பூரில் நடைபெற்ற வன்முறையில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இருவரின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டன.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரான அஃப்ரீன் பாத்திமா, சி.ஏ.ஏ போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் இருந்த அவரது வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது குறித்து அஃப்ரீன் பாத்திமா வெளியிட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

‘நீதிமன்ற வாரன்ட் இல்லாமல் தன் தந்தையை அலகாபாத் போலீஸார் பிடித்துவைத்திருக்கிறது. அவர் எங்கே இருக்கிறார் என்பதை எங்கள் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தவில்லை’ என்று அஃப்ரீன் பாத்திமா காணொளியில் கூறியிருக்கிறார்.

டெல்லியில் புல்டோசருக்கு எதிர்ப்பு
டெல்லியில் புல்டோசருக்கு எதிர்ப்பு
AP

`கிரிமினல்களும் மாஃபியா’வும் புல்டோசர் கொண்டு நசுக்கப்படுவார்கள்’ என்று எச்சரித்த யோகி, ஏழைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் கூடாது என்று அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அஃப்ரீன் பாத்திமாவின் வீடு இடிக்கப்பட்டிருக்கிறது. அஃப்ரீன் பாத்திமா வெளியிட்ட காணொளியைக் கண்டு அதிர்ச்சியுடன் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர். அதில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து உத்தரப்பிரதேசம் தனக்கு விலக்கு அளித்துக்கொண்டதா?’ என்று கேட்டிருக்கிறார். யோகி அரசின் புல்டோசர் அரசியலால் மக்கள் மிரண்டுபோயிருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism