Published:Updated:

எல்லாமே தனிப்பட்ட குற்றச்சாட்டுகள்... என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு?

சீமான், நாம் தமிழர் கட்சி
சீமான், நாம் தமிழர் கட்சி

``உறவுகளே...'' - சீமான் தன் கட்சித் தொண்டர்களை இப்படித்தான் அழைப்பார். அந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரிவும் பிரச்னைகளும்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன. என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு?

சீமான் தன் பிம்பத்துக்குத் தானே குழி தோண்டியது, ஈழம் - பிரபாகரன் சந்திப்பு குறித்த பேச்சுகளின்போதுதான். 'அண்ணன் என்னை ஆமைக்கறி சாப்பிடச் சொன்னார்', 'பிரபாகரன் நாற்பதாயிரம் டன் உள்ள ஆஸ்திரேலிய அரிசிக்கப்பலை சுட்டுப்பழகப் பயிற்சி கொடுத்தார்', 'பிரபாகரன் நான் சாப்பிடும்போது என்னென்ன சாப்பிடுகிறேன் என்று குறிப்பெழுத ஒருவரை நியமித்தார்', 'பொட்டு அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லியை உடைத்துப்பார்த்தால் உள்ளே கறி இருந்தது' என்றெல்லாம் அவர் பேசிய பேச்சுகள் சீமானைக் கேலிப்பொருளாக்கின.

சீமான் - பிரபாகரன்
சீமான் - பிரபாகரன்

30 ஆண்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கத்தை 'தமிழீழ முனியாண்டி விலாஸ்'-ஆக சீமான் மாற்றுகிறார் என்று குற்றச்சாட்டுகள் வலுத்தன. 'சீமான் தன்னை மட்டுமல்ல, பிரபாகரனையும் சேர்த்து கேலிப்பொருளாக மாற்றுகிறார்' என்று ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்தன.

'`சீமான் பொய் சொல்கிறார். அவர் பிரபாகரனைச் சந்தித்ததே எட்டே நிமிடங்கள்தான்" என்றார் வைகோ. கொளத்தூர்மணியும்் சீமானின் 'தமிழீழ சமையல் சாதம், ஆமைக்கறி பிரமாதம்' பேச்சுகளை மறுத்தார். இதனாலேயே சீமான் கடும் கண்டனங்களும் கிண்டல்களுக்கும் ஆளானார்.

சரி, இப்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய கல்யாணசுந்தரமும் ராஜிவ்காந்தியும் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்?

'தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் வசூலிக்கப்பட்ட நிதிக்கு முறையான கணக்குவழக்குகள் இல்லை. 'மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது' என்று மேடையில் பேசிவிட்டு சீமான் மது அருந்துகிறார், புகைபிடிக்கிறார். நாங்கள் போன் செய்தால் சீமான் எடுப்பதில்லை, எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பதில் அனுப்புவதில்லை.'

சீமான்
சீமான்

இதற்கு சீமானின் பதில்கள் என்ன?

`அவர்கள் என் மனதைப் புண்படுத்தியதால்தான் நான் போனை எடுப்பதில்லை. அவர்கள் கட்சியை வளர்க்கவில்லை, அவர்களைத்தான் வளர்த்துக்கொண்டார்கள். ஃபேஸ்புக்கில் எனக்கு எதிராகப் போடப்படும் பதிவுகளை அவர்கள் தடுப்பதில்லை.'

மொத்தச்சண்டையே 'சிகரெட் குடிக்கிறார், ஃபேஸ்புக் பதிவு, போனை எடுக்கவில்லை' என்கிற தனிப்பட்ட குற்றச்சாட்டுகளாக இருக்கின்றனவே தவிர, கொள்கைரீதியிலான பிரச்னைகளாகத் தெரியவில்லை. ``சீமானிசத்தை ஏற்கமாட்டோம் என்கிறார்கள்'' - இது சீமானின் ஆதங்கம். "நாங்கள் பிரபாகரனிசத்தைத்தான் ஏற்போம்'' - இது கல்யாணசுந்தரத்தின் பதில்.

'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளே 'பிரபாகரனிசம்' என்று எதையும் முன்வைத்ததில்லை.

சரி 'இயம்' என்றால் என்ன?

டிட்டோ சீமான்களாக உருவாக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான எதிர்காலப் பாதைதான் என்ன?

- முழுமையான அலசல் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > சீமானிசம் Vs பிரபாகரனிசம்... 'நாம் தமிழர்' தகராறு! https://bit.ly/33GjmRy

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு