Published:Updated:

காஞ்சிபுரம்: தரமற்ற கட்டுமானப் பணிகள்; ஒப்பந்ததாரருக்கு டோஸ், அதிகாரிகள் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி

ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் - காஞ்சிபுரம்

பழங்குடியினர் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை திடீர் ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர், ஒப்பந்ததாரரை அழைத்து எச்சரித்ததுடன், இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார்.

காஞ்சிபுரம்: தரமற்ற கட்டுமானப் பணிகள்; ஒப்பந்ததாரருக்கு டோஸ், அதிகாரிகள் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி

பழங்குடியினர் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை திடீர் ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர், ஒப்பந்ததாரரை அழைத்து எச்சரித்ததுடன், இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார்.

Published:Updated:
ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள ஊத்துக்காடு பகுதியில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 76 பழங்குடியினர் குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு குடியிருப்பும் 4.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று நேரில் ஆய்வுசெய்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் - ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் - ஆர்த்தி

அப்போது, குடியிருப்புகள் தரமற்ற வகையிலிருந்ததைக் கண்டு கோபமடைந்த ஆட்சியர், ஒப்பந்ததாரர் பாபுவை நேரில் அழைத்து கடுமையாகப் பேசினார். `ஏழைகளுக்காகக் கட்டப்படும் குடியிருப்பை இப்படித் தரமற்ற முறையில் கட்டுவது எப்படி நியாயம்?' என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், `கட்டுமானப் பணிகள் தரமான முறையில் நடைபெற வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதே போன்று பணிகளைத் தொடர்ந்தால் ஒப்பந்தத்தை ரத்துசெய்வதுடன், லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் தெரிவிக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, தரமற்ற வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றும்,

ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர்
ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர்

சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநரிடம் அறிவுறுத்தினார். இந்த விவகாரத்தில், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகிய இருவரைப் பணியிடை நீக்கம்செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்.