Election bannerElection banner
Published:Updated:

`நிறைய உண்மை; கொஞ்சம் உடான்ஸ்...’ - திமுக-வின் இறுதி அஸ்திரம்?

அ.தி.மு.க அமைச்சர்கள்
அ.தி.மு.க அமைச்சர்கள்

வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க-வை வீக் ஆக்கும் வகையில் சில வீடியோக்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 4-ம் தேதி இரவு 7 மணியுடன் அரசியல் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரங்கள் முடிவுக்கு வந்துவிடும். ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதி நல்லிரவு வரை மாநிலம் முழுக்க பணப்பட்டுவாடா ரகசியமாக நடைபெறும். இந்த கடைசிக் கட்டத்தில்தான் வாக்காளர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கலந்து பேசி யாருக்கு வாக்களிக்கலாம்? என்பதை முடிவு செய்வர் என்பது அரசியல் கட்சிகளின் எண்ணம். அத்தகைய முடிவெடுக்கும் நேரத்தில் ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள் பற்றிய ஊழல் செய்திகள் வெளியானால் மக்கள் மனதை மாற்றும் என்பதால் திட்டமிட்டு சில வீடியோக்கள் பரப்பி விடப்பட்டு வருகின்றன.

`நிறைய உண்மை; கொஞ்சம் உடான்ஸ்...’ - திமுக-வின் இறுதி அஸ்திரம்?

நமக்கும் சில வீடியோக்களை அரசியல் பார்வையாளர் ஒருவர் அனுப்பினார். அதை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது, செய்தி சேனல்களில் வருவது போன்று 'பிரேக்கிங் நியூஸ்' என்று தொடங்கும் வீடியோ, வாய்ஸ் எதுவும் இன்றி பின்னணி இசை மட்டும் சேர்த்து அமைச்சர்களின் ஊழல்கள் குறித்த தகவல்கள் எழுத்துக்களாக ஓடுகிறது. மக்கள் சேனலில் வந்தது என்று நம்புவதற்காக ஏதோ ஒரு பெயரில் போலியாக சேனல் லோகோ மட்டும் ஓரத்தில் இடம் பெற்றிருக்கிறது. 80 சதவிகிதம் உண்மைத் தகவல் இருந்தது என்றால், சமையலுக்கு கொஞ்சல் சால்ட்-பெப்பர் சேர்ப்பது போல கொஞ்சம் 'உடான்ஸ்' தகவல்களையும் 20 சதவிகிதம் கலந்து கட்டி இருக்கின்றனர்.

அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் என முக்கியமானவர்கள் சேர்த்துள்ள சொத்துக்கள் என்று பட்டியல் ஓடிக்கொண்டிருக்கிறது. அமைச்சர் வேலுமணி குறித்து வீடியோ மட்டுமின்றி, 2000 ரூபாய் நோட்டில் வேலுமணி படம் போட்டு, ரிசர்வ் பேங்க் ஆஃப் அதிமுக என்று எழுதி படத்தை வைரல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க அமைச்சர்கள்
அ.தி.மு.க அமைச்சர்கள்

எங்கிருந்து, யார் இந்த வீடியோக்களை வெளியிட்டது? நமக்கு வீடியோ அனுப்பிய அரசியல் பார்வையாளரிடம் கேட்டோம்,  "இத்தனை நாட்கள் தொண்டை வலிக்க மூச்சிறைக்க பேசியதை எல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள். கடைசி நேரத்தில் எது செய்தாலும் நினைவில் இருக்கும். அதனால் தான் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. அந்த வகையில், வாக்குப்பதிவு நெருக்கத்தில் அமைச்சர்களின் ஊழல் பட்டியலைப் பார்க்கும் வாக்காளர்கள், என்னதான் ஆளுங்கட்சி பணம் கொடுத்தாலும், அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என நம்பப்பகிறது. அதனால் தான் கடைசி கட்டத்தில் வீடியோ வெளியாகி வருகிறது. விசாரித்தபோது இந்த வீடியோக்களின் பின்னால் தி.மு.க-வின் கைங்கர்யம் இருப்பதாக தெரிகிறது!" என்றார்.

உதயநிதியை உசுப்பேற்றுகிறதா ஐ-பேக்?! - பிரசாரத்தின்போது நடந்த கைதின் பின்னணி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு