Published:Updated:

`படித்தவர்களுக்கு சீட்' ரஜினி இலக்கு! படித்த எம்.எல்.ஏ-கள் எத்தனை பேர்? இது சட்டமன்ற கணக்கு!

ரஜினி
ரஜினி

''படித்தவர்களுக்கு தேர்தலில் சீட் தருவேன்'' என ரஜினி சொல்கிறார். இப்போதை சட்டசபையில் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் படித்தவர்கள்? அலசுகிறது இந்தக் கட்டுரை!

மார்ச் 12-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படிச் சொன்னார் ரஜினி.
"என் கட்சியில் 60 முதல் 65 சதவிகிதம் வரை 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், படித்தவர்கள், அவர்கள் செய்யும் வேலையில் பெயர் பெற்றவர்கள், தொகுதியில் அவர்கள் வாழும் பகுதியில் நல்ல கண்ணியமான பெயர் பெற்றவர்களுக்கு ‘சீட்’ கொடுப்பேன்!"
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
"நல்லவர்கள், நன்மதிப்பு மிக்கவர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ், வக்கீல்கள், புகழோடு இருப்பவர்கள் என மீதமுள்ள 35 முதல் 40 சதவிகிதத்தை பூர்த்திசெய்வேன்!"
எனவும் சொல்லியிருக்கிறார் ரஜினி.

அதாவது, படித்தவர்களுக்குத்தான் சீட் தருவேன் என்கிறார் ரஜினி. தமிழக சட்டசபையில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள். அவர்களின் கல்வித் தகுதி என்ன எனக் கள ஆய்வு மேற்கொண்டோம்.

2016 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு வென்ற 234 எம்.எல்.ஏ-க்கள் அளித்த விவரங்களின் அடிப்படியில் பிரிவு வாரியாக கல்வித் தகுதி விவரங்கள் தொகுக்கப்பட்டிருந்தன. அதன்படி பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் 29 பேர். பள்ளி இறுதி மற்றும் மெட்ரிக்குலேஷன் வரை படித்தவர்கள் 34 பேர். பிளஸ் 2 முறை வருவதற்கு முன்பு இன்டர் மீடியட் படிப்புதான் இருந்தது. அப்படி இன்டர் மீடியட், புகுமுக வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு வரையில் படித்தவர்கள் 35 பேர் சட்டமன்றத்தில் இருக்கிறார்கள்.

பிரிவு வாரியாக கல்வித் தகுதி விவரங்கள்
பிரிவு வாரியாக கல்வித் தகுதி விவரங்கள்

பட்டதாரி எம்.எல்.ஏ-கள் எண்ணிக்கை 31. வேளாண் பட்டதாரி ஒருவர் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். முதுகலைப் பட்டதாரிகள் 32 பேர் உள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் எண்ணிக்கை 9 பேர். டிப்ளோமா என்கிற பட்டயப் படிப்பு படித்தவர்கள் 4 பேர். ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2 பேர் இருக்கிறார்கள். சட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை 42. 10 டாக்டர்கள் சட்டமன்றத்தில் உள்ளனர். முனைவர்கள் 5 பேர்.

இந்த கணக்குப்படி பார்த்தால், சட்டம் படித்தவர்கள்தான் சட்டமன்றத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ-க்கள் விவரம்
எம்.எல்.ஏ-க்கள் விவரம்
அடுத்த கட்டுரைக்கு