Published:Updated:

``தமிழக, அமீரக உறவைப்போல சந்திப்பும் வலுவானதாக அமைந்தது" - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் ( ட்விட்டர் )

``தமிழக, அமீரக உறவைப்போல சந்திப்பும் வலுவானதாக அமைந்தது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

``தமிழக, அமீரக உறவைப்போல சந்திப்பும் வலுவானதாக அமைந்தது" - மு.க.ஸ்டாலின்

``தமிழக, அமீரக உறவைப்போல சந்திப்பும் வலுவானதாக அமைந்தது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் ( ட்விட்டர் )

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன்முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றார். துபாய் கண்காட்சியில் கலந்துகொள்வதன் வாயிலாக வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்ப்பதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாகத் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருக்கும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களைச் சந்தித்தார்.

தனது வழக்கமான உடையான வேட்டி, சட்டை அணிந்து செல்லாமல், கோட்டு சூட்டுடன் சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க தமிழக அரசிடமுள்ள திட்டங்கள் குறித்தும் தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவது பற்றியும் இந்தச் சந்திப்பின்போது முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பன்னீர்செல்வன் எழுதிய 'Karunanidhi A Life' புத்தகத்தை அமீரக அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் முதல்வர் கூறியிருப்பதாவது, `` `நம்பர் 1 தமிழ்நாடு' என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத்துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது. தமிழக-அமீரக உறவைப்போல வலுவானதாகச் சந்திப்பு அமைந்தது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism