Published:Updated:

காஷ்மீர்: வங்கி ஊழியர் சுட்டுக்கொலை; `பாஜக அரசு அமைதியை நிலைநாட்ட தவறவிட்டது!' - அசோக் கெலாட்

அசோக் கெலாட்

``பா.ஜ.க தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது, காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டத் தவறிவிட்டது. காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்." - அசோக் கெலாட்

காஷ்மீர்: வங்கி ஊழியர் சுட்டுக்கொலை; `பாஜக அரசு அமைதியை நிலைநாட்ட தவறவிட்டது!' - அசோக் கெலாட்

``பா.ஜ.க தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது, காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டத் தவறிவிட்டது. காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்." - அசோக் கெலாட்

Published:Updated:
அசோக் கெலாட்

காஷ்மீரில் அண்மையில் அரசு ஊழியரான ராகுல் பட் எனும் பண்டிட் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து சென்ற வாரத்தில், அம்ரீன் பட் எனும் தொலைக்காட்சி நடிகையொருவர், அவரது வீட்டுக்கு வெளியே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முன் தினம் அரசுப் பள்ளியொன்றில் ரஜினி பாலா எனும் ஆசிரியை பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், காஷ்மீரில் வங்கி ஊழியராகப் பணியாற்றிவந்த ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் பயங்கரவாதிகளால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விஜய்குமார் என்று தெரியவந்திருக்கிறது.

இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலிருக்கும் எல்லாக்கி தெஹாதி வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் பயங்கரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர்

இதில் படுகாயமடைந்த விஜய்குமார், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய அரசை சாடியிருக்கிறார். இது குறித்து அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், ``ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பா.ஜ.க தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது, காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டத் தவறிவிட்டது. காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தீவிரவாதிகளால் நம் மக்கள் கொல்லப்படுவதை பொறுத்துக் கொள்ளமுடியாது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism