Published:Updated:

பிரதமர் மோடியின் வைரல் போட்டோ உண்மையா? - விளக்கம் கொடுத்த `தி நியூயார்க் டைம்ஸ்'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரதமர் மோடியின் வைரல் போட்டோ
பிரதமர் மோடியின் வைரல் போட்டோ

கடந்த சில நாள்களாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வைரல் ஆனது. அந்தப் புகைப்படம் குறித்து தி நியூயார்க் டைம்ஸ் விளக்கமளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய பிரதமர் மோடி, குவாட் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க, கடந்த 22-ம் தேதி அமெரிக்கா சென்றார். ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர். கடந்த 27-ம் தேதி இந்தியா திரும்பினார். மோடியின் அமெரிக்கப் பயணங்கள் குறித்து அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் செயல்படும் பிரபல நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் மோடி புகைப்படத்துடன், `உலகின் கடைசி, சிறந்த நம்பிக்கை: உலகின் மிகவும் அன்பான மற்றும் சக்திவாய்ந்த தலைவர் நம்மை ஆசீர்வதிக்க இங்கே இருக்கிறார்' என்ற வாசகங்களோடு செய்தி வெளியானதுபோல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனது.

`தேநீர் கடை சிறுவன், இன்று ஐ.நா-வில் 4-வது முறையாக உரையாற்றுகிறான்!´ -பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

இந்தப் புகைப்படம் போலியாக உருவானது என்று பலரும் கூறிவந்த நிலையில், அந்தத் தேதியில் வெளியான உண்மையான பக்கத்தின் புகைப்படத்தைப் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதற்கிடையில், இந்தப் புகைப்படம் குறித்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளக்கம் அளித்துள்ளது. இதில், `இது முற்றிலும் புனையப்பட்ட படம். புழக்கத்திலுள்ள பிரதமர் மோடியின் புனையப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. உண்மையுள்ள ஊடகவியல் தேவைப்படும் நேரத்தில், போட்டோ ஷாப் செய்யப்பட்ட படங்களை மீண்டும் பகிர்வது அல்லது பரப்புவது தவறான தகவல்களையும், நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கும்’ என்று கூறி. அந்தப் பத்திரிகையில் மோடி குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகளின் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு