Published:Updated:

``விரைவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைக்கும்!" - அமித் ஷா

அமித் ஷா ( ட்விட்டர் )

``தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூடிய பா.ஜ.க விரைவில் ஆட்சி அமைக்கும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

``விரைவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைக்கும்!" - அமித் ஷா

``தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூடிய பா.ஜ.க விரைவில் ஆட்சி அமைக்கும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Published:Updated:
அமித் ஷா ( ட்விட்டர் )

அடுத்த 30, 40 ஆண்டுகள் பா.ஜ.க-வின் சகாப்தமாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு கூட்டமானது, ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா உட்பட பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ``அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பா.ஜ.க-வின் சகாப்தமாக இருக்கும். சர்வதேச அளவில் இந்தியா தலைமை வகிக்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பா.ஜ.க விரைவில் முடிவுகட்டும். அதுமட்டுமல்லாமல், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூடிய விரைவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்.

பா.ஜ.க - மோடி, அமித் ஷா
பா.ஜ.க - மோடி, அமித் ஷா

காங்கிரஸ் ஒரு கட்சியாக மாறிவிட்டதால்தான் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கட்சிக்குள்ளாகவே ஜனநாயகத்துக்காகப் போராடி வருகின்றனர்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!