Published:Updated:

``தி.மு.க-வை இயக்குகிறதா பி.ஜே.பி?” - காங்கிரஸ் கணிப்பு... கண்டுகொள்ளாத தி.மு.க!

உடைகிறதா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி?

தி.மு.க கூட்டணியில் ஐந்து சதவிகித வாக்கு வைத்துள்ள எங்களைக் கழற்றிவிட்டால் அதன் நஷ்டம் தி.மு.க-வுக்குதான். எங்களைத் தவிர அந்தக் கூட்டணியில் வேறு எந்தக் கட்சி பலமாக இருக்கிறது” என்று உக்கிரமாகச் சொல்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

``தி.மு.க-வை இயக்குகிறதா பி.ஜே.பி?” - காங்கிரஸ் கணிப்பு... கண்டுகொள்ளாத தி.மு.க!

தி.மு.க கூட்டணியில் ஐந்து சதவிகித வாக்கு வைத்துள்ள எங்களைக் கழற்றிவிட்டால் அதன் நஷ்டம் தி.மு.க-வுக்குதான். எங்களைத் தவிர அந்தக் கூட்டணியில் வேறு எந்தக் கட்சி பலமாக இருக்கிறது” என்று உக்கிரமாகச் சொல்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

Published:Updated:
உடைகிறதா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி?

``அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்று சொல்லிவந்தவர்களே இப்போது இந்தக் கூட்டணிக்கு நாள்கள் எண்ணப்படுகின்றன” எனத் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியைப் பார்ததுச் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். உள்ளாட்சித் தேர்தலில் நடந்த உள்குத்து மட்டுமே இதற்குக் காரணம் அல்ல என்கிற புதிய தகவல்களும் உலவுகின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க-காங்கிரஸ் உறவு மலர்ந்தது. அந்தக் கூட்டணி உறவு 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 இடங்களில் வெற்றியும் பெற்றது. ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வின் பின்னால் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு இருப்பதால் தனக்கு பின்னால் காங்கிரஸ் கட்சி இருப்பது நல்லது என்ற நோக்கில் தி.மு.க- காங்கிரஸ் உறவில் பிணைப்பு அதிகமாகவே இருந்தது. சில மாதங்களுக்கு முன்பாகத் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்தக் கூட்டணி அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று தைரியமாகச் சொன்னார். ஆனால், அந்த உறவுக்கு உள்ளாட்சித் தேர்தலே உலைவைத்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. சட்டமன்றத் தேர்தல் போன்று இந்த உள்ளாட்சி தேர்தலிலும் தங்களுக்குப் பதவிகள் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால், மாவட்டச் செயலாளர்கள் வசமே பொறுப்புகளைத் தி.மு.க தலைமை ஒப்படைத்ததால் பல இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காமல் போனது. இதுதான் உறவில் ஏற்பட்ட விரிசலுக்கு முதல் காரணம். தேர்தல் முடிந்த பிறகு, தி.மு.க கூட்டணி அ.தி.மு.க-கூட்டணியைவிட அதிக இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் கணிசமானவர்கள், ஒன்றிய மற்றும் மாவட்டக் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர். மாவட்ட வாரியாகத் தங்களுக்கு யூனியன் சேர்மன், சில மாவட்டங்களில் மாவட்ட சேர்மன் பதவி வேண்டும் எனக் காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், ``நாங்கள் அதிக உறுப்பினர்களை வைத்திருக்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு பதவியை ஏன் தாரைவார்க்க வேண்டும். கூட்டணி எல்லாம் மேலிடத்தில் மட்டும்தான். இங்கெல்லாம் கிடையாது” என்று காங்கிரஸ் கட்சிக்குத் தண்ணி காட்டினர் தி.மு.க-வினர்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ஒருபுறம் தி.மு.க பதவியை அளிக்க மறுத்து தண்ணி காட்டியது என்றால், மறுபுறம் காங்கிரஸ், தி.மு.க ஏற்க இருந்த பதவிக்கு வேட்டு வைத்தது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க பல இடங்களில் தோல்வியைத் தழுவியது. ஆனால், பெரும்பாலான ஒன்றியங்கள் அந்தக் கட்சியின் வசம் சென்றது. அதற்குத் துணையாக இருந்தது காங்கிரஸ் கட்சி. ஆம்! தி.மு.க-வை ஆதரிக்க வேண்டிய காங்கிரஸ் கட்சியினர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு அளித்தனர், அதற்குப் பரிசாக துணைத்தலைவர் பதவியும் வாங்கியுள்ளார்கள்.

சிதம்பரத்தின் சொந்த மாவட்டமான சிவகங்கையிலும் இது நடந்தது. இந்தக் குளறுபடிகள் ஒருபுறம் நடந்து வந்தபோதுதான், ``கூட்டணிக் கட்சிகளுக்கான மாண்பை தி.மு.க காக்கவில்லை” என்று அழகிரி அறிக்கைவிட, கொதித்துவிட்டது தி.மு.க. உடனடியாக ஸ்டாலினுடன் மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசனை நடத்தினார்கள். நம் தயவுதான் அவர்களுக்குத் தேவை, அவர்கள் நமக்குத் தேவையில்லை” என்று கடுப்புடன் சொல்லிவிட்டார்கள். அதே நேரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். கூட்டணிக் கட்சியாக இருந்து வந்த தி.மு.க அதில் பங்கேற்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது தி.மு.க. அதற்குப் பிறகுதான் என்ன நடந்தது என்று சோனியா காந்தி விசாரிக்க, ``தி.மு.க-காங்கிரஸ் விரிசல் தெரிந்துள்ளது. உடனடியாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார் அழகிரி். அங்கு தி.மு.க-வுக்கு எதிரான அறிக்கை குறித்து கடிந்துள்ளார் சோனியா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரம் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்ளாத தி.மு.க அதற்கு டி.ஆர்.பாலு மூலம் ஒருபதிலும் அளித்தது. ``கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என்று அழிகிரி கூறிய பின், கூட்டத்தில் எப்படிப் பங்கேற்க முடியும்” என்று கேட்டார். இதற்குப் பிறகுதான் துரைமுருகன், ``காங்கிரஸ் விலகிப்போனால் எங்களுக்கு நஷ்டமில்லை” என்று ஓப்பனாகக் கருத்து தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட கூட்டணி விரிசல் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. ஆனால், இதற்குப் பின்னால் பி.ஜே.பி இருப்பதாக இப்போது புதிய தகவல்களைக் கசியவிடுகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

``இந்தியாவில் பி.ஜே.பி-க்கு எதிராக வலுவான போராட்டக் களத்தை முன்வைக்கும் கட்சிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க ஆகியவை முன்னிலையில் இருக்கின்றன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது பி.ஜே.பி-க்கு உறுத்தலாக இருக்கிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற கூடாது என்று பி.ஜே.பி நினைக்கிறது. தி.மு.க தரப்பின் மூத்த நிர்வாகிகள் குறித்த 24 ஃபைல்கள்தான் இப்போது மத்திய அரசுக்குத் துருப்புச் சீட்டாக இருக்கின்றன. அவற்றை வைத்து தி.மு.க-வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நோக்கம் இருக்கிறது. இது தெரிந்துதான் சிலநாள்களுக்கு முன்பு தி.மு.க தலைவருக்கு நெருக்கமான ஒருவர் மத்திய இலாகாவில் மூத்த அமைச்சர் ஒருவரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, ``உங்கள் தலைவரை கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். மத்திய அரசு விஷயத்தில் நீங்கள் தொடர்ந்து இப்படி எதிர்ப்பு தெரிவித்தால், உங்கள் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட வேண்டி வரும்” என்று பாலிஷாகச் சொல்லியுள்ளார். அதற்குப் பிறகுதான் காங்கிரஸ்கட்சியின் மீதான வெறுப்பு ஆரம்பித்தது” என்கிறார்கள்.

அதே நேரம் தி.மு.க தரப்பிலோ, ``உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் பாடுபட்டோம். ஆனால், அ.தி.மு.க-வுக்கு மறைமுகமாக வாக்களித்துள்ளனர். இதற்குப் பின்னால் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணியை முறிக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். எங்களால்தான் காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் கௌரவமான வெற்றியைப் பெற முடிந்தது. அதற்கு அவர்கள் காட்டும் நன்றிதான் இது. உண்மையில் சோனியா நடத்திய கூட்டத்துக்கு டி.ஆர்.பாலுவை அனுப்பி வைத்தார்கள். ஆனால், அவர் டெல்லி போன பிறகு, மம்தா கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தகவல் வந்ததும், பாலுவை செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். தலைமை சொல்லியே பாலுவும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பேசினார். இதில் பி.ஜே.பி பின்புலம் இல்லை” என்கிறார்கள்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், ``அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராகக் கூடாது எனச் சிலர் சதி செய்து இந்தக் கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார். மற்றொரு புறம் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தி.முக கூட்டணியைவிட வேறு அணியை அமைப்பது நல்லது என்று தலைமைக்கு கருத்து தெரிவித்துள்ளார். துரைமுருகன் பேச்சையும் டெல்லிக்கு பாஸ் செய்துள்ளார்கள். இனி, டெல்லி தலைமை இந்த விஷயத்தில் சமரசம் செய்யாவிட்டால் கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையே இப்போது ஏற்பட்டுள்ளதை இரண்டு கட்சிகளுமே ஒப்புக்கொள்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் ஐந்து சதவிகித வாக்கு வைத்துள்ள எங்களைக் கழற்றிவிட்டால் அதன் நஷ்டம் தி.மு.க-வுக்குதான். எங்களைத் தவிர அந்தக் கூட்டணியில் வேறு எந்தக் கட்சி பலமாக இருக்கிறது” என்று உக்கிரமாகச் சொல்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism