Published:Updated:

மணிப்பூர் கலவரம்: `எனது மாநிலம் பற்றி எரிகிறது, உதவுங்கள் பிரதமரே..!' - மேரி கோம் கோரிக்கை

மணிப்பூர்

மணிப்பூரில் கலவரம் தீவிரமடைந்திருக்கிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த உதவும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு விளையாட்டு வீராங்கனை மேரி கோம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Published:Updated:

மணிப்பூர் கலவரம்: `எனது மாநிலம் பற்றி எரிகிறது, உதவுங்கள் பிரதமரே..!' - மேரி கோம் கோரிக்கை

மணிப்பூரில் கலவரம் தீவிரமடைந்திருக்கிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த உதவும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு விளையாட்டு வீராங்கனை மேரி கோம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மணிப்பூர்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கும், பழங்குடியின சமுதாயத்தைச் சாராத மைத்திரி சமுதாயத்துக்குமிடையே கடந்த சில நாள்களாக மோதல் நடந்துவருகிறது. மைத்திரி இன மக்கள் தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிவருகின்றனர். ஆனால், அதற்கு மணிப்பூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த மாநில முதல்வர் பேசவிருந்த மேடைக்குத் தீவைக்கப்பட்டது. தொடர்ந்து மாநிலத்தில் பதற்றம் நிலவிவருகிறது. சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பாக பழங்குடியின மக்கள் ஒற்றுமைப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

மணிப்பூர்
மணிப்பூர்

இந்தப் பேரணியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பேரணியில் பழங்குடியின மக்களுக்கும், பழங்குடியினர் அல்லாத மக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. நேற்று இரவு திடீரென மாநிலத்தில் இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. அதில் வீடுகள், தேவாலயங்கள் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன. இதில் தமிழர்களின் வீடுகள், உணவகங்கள் உள்ளிட்டவையும் சேதமாகியிருக்கின்றன.

இது தொடர்பாக மோரே தமிழ்ச் சங்க நிர்வாகிகள், ``தமிழர்கள் தனிப்பட்ட முறையில் இலக்குவைத்து தாக்கப்படவில்லை. இரு குழுக்களுக்கிடையேயான மோதலில் தமிழர்கள் சிக்கிக்கொண்டனர். இங்கு துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இணைய சேவை இங்கு துண்டிக்கப்பட்டிருக்கிறது. செல்போன் சேவையும் தொடர்ச்சியாகக் கிடைப்பதில்லை. தமிழர்கள் பதற்றத்திலும் துயரத்திலும் இருகின்றனர்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

இரவு முழுக்க ராணுவத்தினரும், அஸ்ஸாம் ஆயுதப்படையினரும் சேர்ந்து வன்முறையில் சிக்கிக்கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர். இரவு முழுக்க 7,000 பேரை ராணுவத்தினர் மீட்டு பத்திரமான இடத்தில் தங்கவைத்தனர். இந்த வன்முறையால் இம்பால் உள்ளிட்ட மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மணிப்பூர் கலவரம்: `எனது மாநிலம் பற்றி எரிகிறது, உதவுங்கள் பிரதமரே..!' - மேரி கோம் கோரிக்கை

அடுத்த சில நாள்களுக்கு மணிப்பூரில் இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. வன்முறை பாதித்த பகுதிகளில் ராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை நடத்தியிருக்கின்றனர். இன்றும் இம்பாலின் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த மணிப்பூருக்குக் கூடுதல் ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. மத்திய விரைவுப் படையும் மணிப்பூருக்கு விரைந்திருக்கிறது. வன்முறை குறித்து மாநில முதல்வர் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன் மூலம் கேட்டறிந்தார்.

மேரி கோம்
மேரி கோம்

இது குறித்துப் பேசிய முதல்வர் சிங், ``மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்கக் கூடுதல் துணை ராணுவப்படை தேவையாக இருக்கிறது. வன்முறையில் ஈடுபடும் தனிநபர்கள், அமைப்புகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநிலப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது" என்றார்.

பிரபல மல்யுத்த வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டரில், ``எனது மாநிலம் பற்றி எரிகிறது. உதவுங்கள்..." என்று கூறி வன்முறைப் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.