Published:Updated:

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரேவுக்காக கண்ணீர் வடித்துவிட்டு, ஒரே வாரத்தில் எதிரணிக்குத் தாவிய எம்.எல்.ஏ

கண்ணீர் வடித்த எம்.எல்.ஏ.

உத்தவ் தாக்கரேவுக்காக கண்ணீர் வடித்த சிவசேனா எம்.எல்.ஏ திடீரென ஏக்நாத் ஷிண்டே அணிக்குச் சென்றுவிட்டார்.

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரேவுக்காக கண்ணீர் வடித்துவிட்டு, ஒரே வாரத்தில் எதிரணிக்குத் தாவிய எம்.எல்.ஏ

உத்தவ் தாக்கரேவுக்காக கண்ணீர் வடித்த சிவசேனா எம்.எல்.ஏ திடீரென ஏக்நாத் ஷிண்டே அணிக்குச் சென்றுவிட்டார்.

Published:Updated:
கண்ணீர் வடித்த எம்.எல்.ஏ.

மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு கவிழ்க்கப்பட்டு, புதிய அரசு பதவியேற்றிருக்கிறது. சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 40 பேர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணிக்குச் சென்றிருக்கின்றனர். உத்தவ் தாக்கரே அணியிலிருந்த எம்.எல்.ஏ சந்தோஷ் பங்கர் கடந்த வாரம் 24-ம் தேதி உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அழுதுகொண்டே இரு கைகளையும் கூப்பி அதிருப்தி அணியில் இருப்பவர்கள் மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது கட்சித் தொண்டர் ஒருவர் தனது கர்ச்சீப்பை எடுத்துக்கொடுத்து கண்ணீரை துடைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். சந்தோஷ், `உத்தவ் தாக்கரேவுடன் நாங்கள் இருப்போம்’ என்று அழுதுகொண்டே தெரிவித்தார்.

கண்ணீர் வடித்த எம்.எல்.ஏ.
கண்ணீர் வடித்த எம்.எல்.ஏ.

ஆனால் நேற்று திடீரென சந்தோஷ், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று, தன்னையும் அந்த அணியில் சேர்த்துக்கொண்டார். மேலும் பலர் தங்களது அணிக்கு வருவார்கள் என்று ஏக்‌நாத் ஷிண்டே அணி தெரிவித்திருந்தது. இன்று சட்டமன்றத்தில் ஏக்‌நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்தபோது, கடைசி நேரத்தில் ஷியாம் சுந்தர் ஷிண்டே என்ற எம்.எல்.ஏ-வும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு பேசிய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அமலாக்கப் பிரிவு காரணமாகத்தான் சிவசேனாவிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் பிரிந்து சென்றதாக வந்த புகாருக்கு பதிலளித்தார். ``ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் காரணமாகத்தான் அவர்கள் வந்தனர்" என்று வெளிப்படையாகப் பேசினார். அதோடு தன்னைக் கிண்டல் செய்தவர்களை, தான் பழிவாங்கப்போவதில்லை என்றும், மன்னித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.