Published:Updated:

பஞ்சாப்: பாடகர் படுகொலை எதிரொலி... 424 விஐபி-க்களுக்கு மீண்டும் பாதுகாப்பு!

பாடகர் சித்து

பாடகர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் 424 பேருக்கு பாதுகாப்பு கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பஞ்சாப்: பாடகர் படுகொலை எதிரொலி... 424 விஐபி-க்களுக்கு மீண்டும் பாதுகாப்பு!

பாடகர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் 424 பேருக்கு பாதுகாப்பு கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Published:Updated:
பாடகர் சித்து

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு ஆட்சி அமைத்தப் பிறகு விஐபி-க்கள் 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெற்றுக்கொண்டது. விஐபி கலாசாரத்தை குறைக்கும் நோக்கத்தில் இந்தப் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்ட ஓரிரு நாள்களில் பாடகர் சித்து மூஸ்வாலா பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. விஐபி-க்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. அதோடு பாடகர் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுதும் கேங்க்வார் அபாயமும் ஏற்பட்டது.

சித்து மூஸ்வாலா
சித்து மூஸ்வாலா

இதையடுத்து நிலைமை மேலும் மோசமடைவதை தடுக்க பஞ்சாப் அரசு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் சோனி என்பவர் பாதுகாப்பு திரும்பப் பெற்றது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பாதுகாப்பு ஏன் திரும்ப பெறப்பட்டது என்பது குறித்தும், எந்த அடிப்படையில் பாதுகாப்பு விளக்கிக்கொள்ளப்பட்டது, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி பஞ்சாப் அரசுக்கு கடந்த திங்கள்கிழமை கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ்
போலீஸ்

இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பாக சீல்டு உரை ஒன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட 424 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆபரேஷன் புளுஸ்டார் உட்பட பல நிகழ்வுகள் வந்ததால் பாதுகாப்பு தற்காலிகமாக திரும்பப் பெற்றதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism