Published:Updated:

ஆளுநர் அளித்த மசால் வடை, முதல்வர் ருசித்த இட்லி... தமிழக அரசியலில் `பார்ட்டி' பாலிட்டிக்ஸ்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் அழைப்புக்கு நோ சொல்லிவிட்டு, அதற்கு மறுதினமே நரிக்குறவர் சமூகத்தின் மாணவியின் அழைப்பை ஏற்று அவர் வீட்டிற்குச் சென்று அங்கு கறிக்குழம்பு உண்டுவிட்டு 'இது திராவிட மாடல்' என்று ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் அளித்த மசால் வடை, முதல்வர் ருசித்த இட்லி... தமிழக அரசியலில் `பார்ட்டி' பாலிட்டிக்ஸ்!

ஆளுநர் அழைப்புக்கு நோ சொல்லிவிட்டு, அதற்கு மறுதினமே நரிக்குறவர் சமூகத்தின் மாணவியின் அழைப்பை ஏற்று அவர் வீட்டிற்குச் சென்று அங்கு கறிக்குழம்பு உண்டுவிட்டு 'இது திராவிட மாடல்' என்று ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:
முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி
“டீயும் மாசால் வடையும் சாப்பிட வாங்க” என்று ஆளுநர் அழைப்பு விடுத்தால், அவரது அழைப்புக்கு நோ சொல்லிய முதல்வர், "கறி சோறு சாப்பிட எங்க வீட்டுக்கு வாங்க" என்று எப்போதோ அழைத்த நரிக்குறவர் சிறுமியின் வீட்டுக்கு விசிட் அடித்துள்ளார். 'பார்ட்டி' அரசியல் மாடலுக்கு எதிராக இது 'திராவிட அரசியல் மாடல்' என்று முதல்வர் சுட்டிக்காட்டியிருப்பதால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான இடைவெளிகள் இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
ஆளுநர் டீ பார்ட்டி
ஆளுநர் டீ பார்ட்டி

டீ பார்ட்டி, டின்னர் பார்ட்டி என்று பார்ட்டிகளுக்கு அழைத்து அரசியல் களத்தையே மாற்றிய சம்பவங்கள் இந்தியாவில் பலமுறை நடந்துள்ளன. அதே நேரம் பாமர மக்களின் வீட்டில் உணவருந்தி அதன்மூலம் அகில இந்திய அரசியல்களத்தில் அடையாளமானவர்களும் இந்தியாவில் அநேக நபர்கள் உண்டு. இந்த இரண்டு அரசியல் சம்பவத்தையும் அடுத்தடுத்து கண்டதால் அனல் பறக்கிறது தமிழக அரசியல் களம்.

தமிழகத்தின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதால் அன்றைக்குத் தனது சார்பில் ஒரு டீ பார்ட்டி ஒன்றை நடத்த முடிவெடுத்தார். ஆளுநர் டீ பார்ட்டி நடத்துவது என்பது புதிதல்ல; தமிழ்ப் புத்தாண்டுக்கு ஆளுநர் டீ பார்ட்டி வைப்பது வழக்கமான நிகழ்வுதான் என்றாலும் தற்போது ஆளுநர் மாளிகைக்கும், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் இடையே உள்ள உரசல் காரணமாக இந்த பார்ட்டி குறித்த பரபரப்பு விவாதங்கள் ஆரம்பத்திலேயே எழுந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக அரசியல் களத்தில் தன் மீதுள்ள நெகட்டிவ் இமேஜ்ஜை சரி செய்யவும், ஆளுங்கட்சியான தி.மு.க-வுக்கும் ஆளுநர் மாளிகைக்கு இடையேயுள்ள உரசலைச் சரிசெய்யவுமே இந்த டீ பார்ட்டி அறிவிப்பு வெளியானது. தமிழகத்தின் பிரதான கட்சிகளுக்கும், தமிழக அரசின் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் கலந்துகொள்ள அழைப்பு சென்றது.

இந்த பார்ட்டியில் பங்கேற்பதா வேண்டாமா எனத் தி.மு.க விவாதித்துக் கொண்டிருக்கும் போதே, அதன் கூட்டணிக் கட்சிகள் இந்த பார்ட்டியைப் புறக்கணிக்க, கடைசியில் ஆளும் கட்சியான தி.மு.க-வும் புறக்கணிப்பு செய்தது. ஆளுநர் தரப்போ இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்தது. எதிர்க்கட்சியினர், மத்திய அரசின் அதிகாரிகள் என ஒரு பட்டாளத்தை வைத்து ஏப்ரல் 14-ம் தேதி மாலை டீ பார்ட்டி நடந்து முடிந்தது.

கிண்டி ஆளுநர் மாளிகை
கிண்டி ஆளுநர் மாளிகை
பார்ட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு மசால் வடை, பிரௌணி, சமோசா, குலோப்ஜாமுன், வெஜ் கட்லட் உள்ளிட்ட உயர் சைவ உணவுகளோடு சூடாக டீ மற்றும் காபி பரிமாறப்பட்டன. டீ பார்ட்டிக்கு வந்தவர்களை வழக்கம் போல் வரவேற்று அமர்ந்தார் ஆளுநர். அரசியல் பேசும் வாய்ப்பும் அங்கு இல்லாமல் போனது அ.தி.மு.க தரப்புக்கு வருத்தம்.

தி.மு.க இந்த பார்ட்டிக்கு வராமல் போனதால் ஆளுநர் மாளிகைக்கு 'செலவு மிச்சம்' என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்ல, “ஆளுநர் மாளிகைக்குச் சென்றுவரும் டீசல் செலவு மிச்சமாகும்” என நாங்களும் சொல்லுவோம் என்று தமிழக நிதி அமைச்சர் பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி. எது எப்படியோ, ஆளுங்கட்சியும் அவர்களுடைய சகாக்களும் கலந்து கொள்ளாமலேயே ஆளுநர் மாளிகை டீ பார்ட்டியை முடித்துவிட்டார்கள். ஆளுநரின் சம்பிரதாயமும் முடிந்துவிட்டது. ஆனால் மறுநாள் ஏப்ரல் 15-ம் தேதி காலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் காலினிக்குச் சென்றதுதான் அடுத்த அரசியலாகப் பார்க்கப்படுகிறது.

“எங்க வீட்டுக்குச் சாப்பிட வருவீங்களா?” என்று சில நாள்களுக்கு முன்பாக முதல்வரிடம் போனில் கேட்ட திவ்யாவின் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்த முதல்வர், அங்கு இட்லி, மெதுவடையோடு, நாட்டுக்கோழி கறிக்குழம்பும் சாப்பிட்டதோடு அங்கிருந்த சிறுமிக்கும் அதை ஊட்டிவிட்டார்.
கறிக்குழம்பு இட்லியைக் குழந்தைக்கு ஊட்டிவிடும் முதல்வர் ஸ்டாலின்
கறிக்குழம்பு இட்லியைக் குழந்தைக்கு ஊட்டிவிடும் முதல்வர் ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் நேற்று ஆளுநர் மாளிகையில் ஹைடெக் பார்ட்டியில் உணவருந்திய நிலையில், மறுநாளே அதே உணவை வைத்து சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறினார் ஸ்டாலின். குறிப்பாக, “விளிம்பு நிலை மக்களுக்காக நான் இருக்கிற நமது இயக்கம் இருக்கிறது. இதுதான் திராவிட மாடல்" என்று முதல்வர் ட்விட் போட்டுள்ளார்.

அதாவது ஆளுநர் அழைப்புக்கு நோ சொல்லிவிட்டு, அதற்கு மறுதினமே நரிக்குறவர் சமூகத்தின் மாணவியின் அழைப்பை ஏற்று அவர் வீட்டிற்குச் சென்று அங்கு கறிக்குழம்பு உண்டுவிட்டு 'இது திராவிட மாடல்' என்று ஸ்டாலின் சூசகமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆளுநரின் அரசியலுக்கு முதல்வர் தரப்பு கொடுத்த ரியாக்ஷனே இந்த விசிட் என்கிறார்கள் தி.மு.க-வினர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism