Published:Updated:

`முதல்வர் எழுதிக்கொடுத்தால் மத்திய அரசு நடத்தும்' - டேன்டீ குறித்து அண்ணாமலை பேசியதன் பின்னணி என்ன?

அண்ணாமலை

'டேன்டீ'யை வேண்டாம் என்று முதல்வர் எழுதிக்கொடுத்தால் மத்திய அரசு நடத்தும் என அண்ணாமலை பேசியிருக்கிறார். இது தொழிலாளர்களின் நலனுக்கானதா அல்லது அரசியல் ஆதாயத்துக்கானதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

`முதல்வர் எழுதிக்கொடுத்தால் மத்திய அரசு நடத்தும்' - டேன்டீ குறித்து அண்ணாமலை பேசியதன் பின்னணி என்ன?

'டேன்டீ'யை வேண்டாம் என்று முதல்வர் எழுதிக்கொடுத்தால் மத்திய அரசு நடத்தும் என அண்ணாமலை பேசியிருக்கிறார். இது தொழிலாளர்களின் நலனுக்கானதா அல்லது அரசியல் ஆதாயத்துக்கானதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Published:Updated:
அண்ணாமலை

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, கடந்த 1968-ம் ஆண்டில் தமிழக அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ‘அரசு தேயிலைத் தோட்டம் திட்டம்’ தொடங்கியது. பிறகு 1976-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு இயங்கிவருகிறது. இதில், ஆயிரக்கணக்கான நிரந்தரத் தொழிலாளர்களும், நூற்றுக்கணக்கான தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிந்துவருகின்றனர்.

டேன்டீ
டேன்டீ

இந்த நிலையில் தேயிலைச் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்க 'டேன்டீ' நிறுவனத்தால் இயலவில்லை என்றும், கடுமையான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக நிலங்களின் சில பகுதிகளை வனத்துறைக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு 'டேன்டீ' தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான வேலுமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கோவை மாவட்டம், வால்பாறை அருகே சின்கோனா பகுதியிலுள்ள டேன்டீ அரசு தேயிலைத் தோட்டம், நீலகிரி மாவட்டம் கூடலூர், நடுவட்டம், குன்னூர் டேன்டீ தேயிலைத் தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவுசெய்திருக்கிறது. இதனால், 2,500 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும். இதைத் திரும்பப்பெறும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும்’’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

தேயிலை
தேயிலை

இதேபோல் தமிழக பாஜக சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பேசிய அண்ணாமலை, "எழுத்துபூர்வமாக தமிழக முதல்வர் 'டேன்டீ' எங்களுக்கு வேண்டாம். மத்திய அரசே எடுத்துக்கொள்ளுங்கள். மத்திய அரசே இந்த நிறுவனத்தை நடத்துங்கள் என்று எழுதித் தந்தால், நாங்கள் தயார்" என்று பேசியிருக்கிறார். முன்னதாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதாகவும். பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டிவருகின்றன. இந்த நிலையில் அண்ணாமலையின் 'டேன்டீ' குறித்த பேச்சு தொழிலாளர்களின் நலனுக்கானதா அல்லது அரசியல் ஆதாயத்துக்கானதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ``அவர்கள் அனைத்தையும் விற்று முடித்துவிட்டார்கள். இப்போது தமிழகத்தில் விற்க ஆரம்பிக்கிறார்கள். ஏதாவது ஒரு பொதுத்துறை நிறுவனத்தை, மேலாண்மை செய்து நஷ்டத்தில் இயங்கியதை, லாபத்துக்குக் கொண்டுவந்திருந்தால் பாஜக பெறுவதற்குத் தகுதி உண்டு. எதையும் நிர்வகிக்கத் தகுதியில்லாமல் கமிஷன் கிடைக்கும் என்பதற்காக விற்று, பிழைப்பு நடத்தும் பாஜக, தமிழகத்துக்கு புரோக்கராக அண்ணாமலையை நியமித்திருக்கிறது. அவர் புரோக்கர் வேலையைப் பார்ப்பதற்கு 'டேன்டீ'யைக் கேட்கிறார். நாங்கள் மக்களுக்கான ஆட்சி நடத்துகிறவர்கள். எப்படிக் கொண்டுவர வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த வேலையையெல்லாம் தமிழகத்தில் பார்க்க வேண்டாம்" என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - நாராயணன் திருப்பதி
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - நாராயணன் திருப்பதி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "டேன்டீ என்பது இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. அவர்களுடைய வாழ்வாதாரமே இதுதான். உலகம் முழுவதும் தேயிலைக்கு நல்ல சந்தை இருக்கிறது. இவர்களுடைய நிர்வாகத் திறமையின்மையால்தான் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. எனவேதான், `எங்களுக்கு நன்றாகத் தெரியும் கொடுத்துவிடுங்கள்’ என்று கூறுகிறோம். பி.எஸ்.என்,எல் மற்றும் எல்.ஐ.சி-யை நடத்த முடியவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை" என்றார்.