Published:Updated:

``பெண்களை போல நிதிஷ்குமார் யாரோடு கைகோர்ப்பார் என்றே தெரியாது" - பாஜக நிர்வாகி சர்ச்சை பேச்சு

கைலாஷ் விஜய்வர்கியா ( ட்விட்டர் )

``நரேந்திர மோடி மீது உங்களின் தனிப்பட்ட வெறுப்பினால் எங்களை விட்டு விலகி ராஷ்டிரிய ஜனதா தள தலைவருடன் கைகோர்த்துள்ளீர்கள்." - பாஜக

``பெண்களை போல நிதிஷ்குமார் யாரோடு கைகோர்ப்பார் என்றே தெரியாது" - பாஜக நிர்வாகி சர்ச்சை பேச்சு

``நரேந்திர மோடி மீது உங்களின் தனிப்பட்ட வெறுப்பினால் எங்களை விட்டு விலகி ராஷ்டிரிய ஜனதா தள தலைவருடன் கைகோர்த்துள்ளீர்கள்." - பாஜக

Published:Updated:
கைலாஷ் விஜய்வர்கியா ( ட்விட்டர் )

ஜாதிக் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் ‘அக்னிபத்’ ஆள்சேர்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக பா.ஜ.க மற்றும் ஜே.டி.(யு) இடையே தொடர்ந்து புகைச்சல் இருந்த நிலையில், கடந்த வாரம் பீகாரில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் வெளியேறினார். இதனால் பா.ஜ.க-வினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் நிதிஷ் குமார்.

பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத்
பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத்
ட்விட்டர்

இது தொடர்பாக பா.ஜ.க-வின் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ரவிசங்கர் பிரசாத், “நிதிஷ் குமார்....நீங்கள் வகுப்புவாதத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் 1990-களில் அயோத்தி இயக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது எங்களுடன்தானே இணைந்தீர்கள். லாலு பிரசாத் மீதான தீவன ஊழல் விவகாரத்தில் எங்களுடன் இணைந்து போராடினீர்கள். ஆனால், 2013-ல், நரேந்திர மோடி மீது உங்களின் தனிப்பட்ட வெறுப்பினால் எங்களை விட்டு விலகி ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருடன் கைகோர்த்தீர்கள்.

ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவ் பெயர் எழுந்ததையடுத்து நீங்கள் 2017-ல் ஆர்.ஜே.டி-யை விட்டு வெளியேறினீர்கள். பீகாரை ஊழலிலிருந்து வெளியே கொண்டுவந்து பெருமை சேர்த்த நீங்கள்தான் தற்போது மீண்டும் பீகாரைச் சட்டமற்ற மற்றும் ஊழலின் காலத்துக்குத் தள்ளுகிறீர்கள்" என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா செய்தியாளர்களிடம், "நான் ஒருமுறை வெளியூர் சென்றிருந்தபோது, அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள பெண்கள் தங்கள் காதலரை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வதாகக் கூறினார். பீகார் முதல்வரும் அப்படித்தான், அவர் யாருடைய கையைப் பிடிப்பார் அல்லது யாருடைய கையை விடுவார் என்று தெரியாது" என சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருக்கிறார்.