Published:Updated:

மும்பை: குடும்பப் பிரச்னை; ஸ்டார் ஹோட்டலில் குழந்தையைப் பெற்று கழிவறையில் விட்டுச் சென்ற பெண்

சித்திரிப்புப் படம்

மும்பையில் 41 வயது பெண் ஒருவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து குழந்தை பெற்று அங்கேயே விட்டுச் சென்றிருக்கிறார்.

மும்பை: குடும்பப் பிரச்னை; ஸ்டார் ஹோட்டலில் குழந்தையைப் பெற்று கழிவறையில் விட்டுச் சென்ற பெண்

மும்பையில் 41 வயது பெண் ஒருவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து குழந்தை பெற்று அங்கேயே விட்டுச் சென்றிருக்கிறார்.

Published:Updated:
சித்திரிப்புப் படம்

மும்பையின் தென்பகுதியில் ஒர்லி என்னும் இடத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் 8-வது மாடியில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த அந்தப் பணியாளர் குழந்தையின் அழுகுரல் வரும் பக்கத்தை நோக்கிச் சென்றார். அங்கு இருந்த கழிவறை ஒன்றிலிருந்து சத்தம் வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த குப்பைத்தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்த குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்தது.

இது குறித்து போலீஸாருக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து குழந்தையை நாயர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஹோட்டல் ஊழியர்கள் உடனே அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது குழந்தையை யார் பெற்று குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றது என்ற விவரம் தெரியவந்தது. உடனே போலீஸார் அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

குழந்தை
குழந்தை

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 41 வயது பெண், பணி நிமித்தமாக ஹோட்டலுக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் பிரசவம் ஏற்பட்டதால் குழந்தையைக் கழிவறை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தோம். அவர் குடும்பப் பிரச்னை காரணமாக குழந்தையைப் பெற்று குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்தார். இந்தக் காரியத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் இன்னும் கைதுசெய்யவில்லை. ஆனால் குழந்தையை விட்டுச் சென்றதாக வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism