Published:Updated:

"நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதா..?" - ப.சிதம்பரம் தாக்கு

ப.சிதம்பரம்

குரல் ஓட்டெடுப்பு மூலம் 2023 - 2024 நிதியாண்டில் மொத்தம் ரூ.45 லட்சம் கோடி செலவழிப்பதற்கான மானியக் கோரிக்கைக்கு மக்களவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

Published:Updated:

"நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதா..?" - ப.சிதம்பரம் தாக்கு

குரல் ஓட்டெடுப்பு மூலம் 2023 - 2024 நிதியாண்டில் மொத்தம் ரூ.45 லட்சம் கோடி செலவழிப்பதற்கான மானியக் கோரிக்கைக்கு மக்களவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

ப.சிதம்பரம்

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியது. சபை கூடியது முதல் அவையில் கூச்சலும் கோஷங்களும் ஓங்கி ஒலித்தன. அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க உத்தரவிடக் கோரியும், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் ஆளும் பா.ஜ.க தரப்பு கோஷமிட்டது. இதற்கிடையே சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார். மாலை 6 மணிக்கு சபை கூடியபோது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மானியக் கோரிக்கைகள், அவற்றுக்கான நிதி, அவற்றின் மீதான விவாதம் ஆகியவற்றின் ஓட்டெடுப்புக்காகச் சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஆனாலும், தொடர்ந்து இரு தரப்புக் கட்சிகளும் கோஷமிட்டுக்கொண்டிருந்தன. இதனால் சபாநாயகர் தன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து அமைச்சகங்களின் மானியக் கொள்கைகளையும், விவாதமின்றி ஓட்டெடுப்புக்கு அனுமதித்தார். குரல் ஓட்டெடுப்பு மூலம் 2023 - 2024 நிதியாண்டில் மொத்தம் ரூ.45 லட்சம் கோடி செலவழிப்பதற்கான மானியக் கோரிக்கைக்கு மக்களவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில், "விவாதம் செய்யாமல் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மோசமானது" எனப் பதிவிட்டிருக்கிறார்.