Published:Updated:

கிடைத்தது வங்கி வேலை... ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த இளம்பெண்!

நிலவழகி

வங்கியில் வேலை கிடைத்ததாகக் கூறி, பெண் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் அந்தப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

கிடைத்தது வங்கி வேலை... ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த இளம்பெண்!

வங்கியில் வேலை கிடைத்ததாகக் கூறி, பெண் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் அந்தப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

Published:Updated:
நிலவழகி

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் வில்வராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொய்யாமொழி. இவர், அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்துவருகிறார். இவரின் மகள் நிலவழகி. பொறியியல் பட்டதாரியான இவர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, மேல் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். அதன் பிறகு, ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்துவந்த நிலவழகி... சென்னையிலுள்ள அரசுடமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்றில் வேலை கிடைத்திருப்பதாகக் கூறி, தனது பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவுசெய்துள்ளார்.

நிலவழகி
நிலவழகி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடத்தில் வழங்கியுள்ளார். இந்நிலையில், தலைவர் பதவிக்கான அதிகாரம் துணைத் தலைவருக்கு ஒருமனதாக வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து நிலவழகியிடம் பேசினோம். ``மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியிட்டு, மக்களால் தேர்வு செய்யப்பட்டேன். இதுவரை அந்தப் பணியைச் சிறப்பாக செய்துவந்தேன். இந்நிலையில், நான் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனவே, எதிர்காலத்தைக் கருதி, தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். பதவியில் இருந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லை. பதவி இல்லாமலும்கூட நல்லது பண்ணலாம். ஆகவே, அப்பாவுடன் சேர்ந்து எப்போதும்போல மக்களுக்கு நல்லது செய்வோம்" என்றார்.

ஊராட்சி மன்ற அலுவலகம் - மேல் வில்வராயநல்லூர்
ஊராட்சி மன்ற அலுவலகம் - மேல் வில்வராயநல்லூர்

வங்கியில் வேலை கிடைத்ததால், பெண் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் அப்பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism