Election bannerElection banner
Published:Updated:

தேனி: இ-பாஸ் சோதனை உண்டு... கொரோனா சோதனை இல்லை! - எல்லையில் கவனம் செலுத்துமா மாவட்ட நிர்வாகம்?

குமுளி சோதனைச் சாவடி
குமுளி சோதனைச் சாவடி

கேரளாவிலிருந்து தேனி மாவட்டத்துக்குள் நுழையும்போது, இ-பாஸ் சோதனை செய்யப்படுவதுபோல, பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தையும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தையும் இணைக்கும் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய பிரதான மூன்று வழித்தடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமடைந்த சூழலில், இந்த மூன்று வழிகளையும் முற்றிலுமாக மூடியது கேரள அரசு. இதனால், இடுக்கி மாவட்டத்திலுள்ள தங்களது ஏலக்காய் தோட்டத்துக்குச் செல்ல முடியாமல், தேனி மாவட்ட விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும், இ-பாஸ் கட்டுப்பாடுகள், கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதலை கண்காணித்தல் என தீவிரம்காட்டியது கேரள அரசு.

குமுளி சோதனைச் சாவடி
குமுளி சோதனைச் சாவடி
கேரளா: `கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா; ஆம்புலன்ஸில் பிரசவம்!' - நெகிழ்ச்சி சம்பவம்

இந்தநிலையில், கொரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள சூழலில், குறிப்பாக கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் தற்போதைய நிலையில், கேரளாவிலிருந்து தேனி மாவட்டத்துக்கு வருவோரிடம், எல்லைச் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இருக்கிறதா என்று குமுளி காவல்துறையினரும், கம்பம் வடக்கு காவல்துறையினரும் சோதனை செய்கின்றனர். ஆனால், பயணிகளுக்கக் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருக்கிறதா என்று சோதிக்கும் சுகாதாரத்துறையினர் யாரும் பணியில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குமுளி எல்லைப் பகுதி
குமுளி எல்லைப் பகுதி
தேனி: அதிகரிக்கும் தினசரி பாதிப்பு! - கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிவரும் பெரியகுளம்

``கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் மிக தீவிரமாக இருந்தது. அதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பெரிதும் சிரமப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிக்க, பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அருகேயுள்ள கேரள மாநிலமும் முக்கியக் காரணம். இதை நன்கு அறிந்த தேனி மாவட்ட நிர்வாகம், தற்போது அலட்சியமாகச் செயல்படுவது வேதனையான விஷயம். இ-பாஸ் இருக்கிறதா என்று ஆய்வு செய்வதைவிட, கொரோனா அறிகுறியுடன் ஒருவர் தேனி மாவட்டத்துக்குள் நுழைகிறாரா, அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதா, அவர் மூலம், தேனி மக்களுக்குத் தொற்று பரவாமல் தடுப்பது எப்படி என்று திட்டமிட்டுச் செயல்படுவதுதான் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியம். இனியாவது எல்லைகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். எல்லையில் நிரந்தர மருத்துவக்குழுவினரை பணியமர்த்த வேண்டும்” என்கின்றனர் தேனி மாவட்ட சமூக ஆர்வலர்கள்.

குமுளி சோதனைச் சாவடி
குமுளி சோதனைச் சாவடி

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ``காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் இ-பாஸ் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. சுகாதாரத்துறை மூலம் விரைவில் மருத்துவக்குழு அங்கே பணியமர்த்தப்பட்டு, கண்காணிப்பு திவிரப்படுத்தப்படும்” என்றனர்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு