Published:Updated:

தி.மு.க-வுக்கு எதிராக காங்கிரஸ்! - சூடுபிடிக்கும் தேங்காய்பட்டணம் விவகாரம்...

தேங்காய்பட்டணம்
பிரீமியம் ஸ்டோரி
தேங்காய்பட்டணம்

மாநில அரசு ஆணை பிறப்பித்து வேலை தொடங்குவதற்கான ஆக்கபூர்வமான பணியும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது.

தி.மு.க-வுக்கு எதிராக காங்கிரஸ்! - சூடுபிடிக்கும் தேங்காய்பட்டணம் விவகாரம்...

மாநில அரசு ஆணை பிறப்பித்து வேலை தொடங்குவதற்கான ஆக்கபூர்வமான பணியும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது.

Published:Updated:
தேங்காய்பட்டணம்
பிரீமியம் ஸ்டோரி
தேங்காய்பட்டணம்

தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்காத தி.மு.க அரசைக் கண்டித்து போராட்டத்தை அறிவித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

ஆறு கடலில் கலக்கும் கழிமுகத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் முக்கியமான மீன்பிடித் துறைமுகம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்பட்டணம். தாமிரபரணி ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில், ரூ.97 கோடியில் கட்டப்பட்ட துறைமுகம் 2019-ல் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்துவைக்கப்பட்டது. துறைமுகம் கட்டப்பட்டதிலிருந்து இதுவரை, நுழைவுவாயிலில் படகு கவிழ்ந்து 26 மீனவர்கள் இறந்துள்ளனர். கடந்த 11-ம் தேதி பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த சைமன் (48) என்ற மீனவர் உயிரிழக்க, மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு. இது காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாரின் தொகுதி என்பதால், கூட்டணி பற்றிக் கவலைப்படாமல் தி.மு.க அரசுக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது காங்கிரஸ்.

தி.மு.க-வுக்கு எதிராக காங்கிரஸ்! - சூடுபிடிக்கும் தேங்காய்பட்டணம் விவகாரம்...

இது பற்றி நம்மிடம் பேசிய தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மீனவர் அணி மாநிலத் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், “தொடர் விபத்துகளுக்குத் தவறான டிசைனே காரணம். ஒவ்வொரு முறை மீனவர்கள் இறக்கும்போதும், நுழைவு வாயிலில் மணலை அகற்றுவது, கற்களைப் போடுவது எனக் கண்துடைப்பு வேலைகளைச் செய்கிறது அரசு. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கும்போது மீனவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மனோ தங்கராஜ், அமைச்சர் ஆன பிறகு கண்டுகொள்ளவில்லை. துறைமுகத்தின் நுழைவுவாயில் தெற்கு, வடக்காக இருப்பதால்தான், கடல் அலை மண்ணை முகத்துவாரத்தில் சேர்க்கிறது. கூடவே ஆற்று மணலும் சேர்கிறது. இதற்குத் தீர்வாக துறைமுக நுழைவுவாயிலை கிழக்கு, மேற்காக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய ரூ.243 கோடியில் திட்டம் போடப்பட்டது. அந்தத் திட்டத்தை நான்கு மாதங்களாக தமிழ்நாடு அரசு பெண்டிங்கில் வைத்துவிட்டு, இப்போதுதான் மத்திய அரசின் ஒப்புதலுக்கே அனுப்பியிருக்கிறது. அரசு காலதாமதப்படுத்துவதால் உயிரிழப்புகள் தொடர்கின்றன. இதைக் கண்டித்தே வரும் 26-ம் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறோம்” என்றார்.

ஜார்ஜ் ராபின்சன்
ஜார்ஜ் ராபின்சன்
மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

இது பற்றி அமைச்சர் மனோ தங்கராஜிடம் பேசினோம். “துறைமுகத் திட்டம் தப்பாக இருக்கிறது என்பதால் டபிள்யூ.சி.ஆர்.எஸ்., என்.ஐ.ஓ.டி., ஐ.ஐ.டி., மீன்வளத்துறை பொறியாளர்கள் மற்றும் மீனவர்களின் மரபுவழி அறிவியலைப் பயன்படுத்தி திருத்தப்பட்ட திட்டம் தயாரித்தோம். இந்தியாவிலேயே முதன்முறையாகப் பயன்பெறும் மக்களையும் இணைத்து தயாரிக்கப்பட்டது இந்தத் திட்டம்தான். திட்டத்துக்கு இப்போது மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. மாநில அரசு ஆணை பிறப்பித்து வேலை தொடங்குவதற்கான ஆக்கபூர்வமான பணியும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. துறைமுக முகப்புப் பகுதி ஆபத்தானது என்பதால் காற்று, மழை எச்சரிக்கை வரும்போது `அந்த வழியாகக் கடக்காதீர்கள்’ எனவும், `அந்த இடத்தைக் கடப்பதாக இருந்தால் லைஃப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துங்கள்’ எனவும் அறிவித்திருக்கிறோம். அதை மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட நாள்களில்தான் இந்த விபத்துகள் நடந்துள்ளன. மக்கள் குறைந்தபட்ச ஒத்துழைப்புக்கூட கொடுக்காமல் இருந்தால் எப்படி?” என்றார்.

பா.ஜ.க-வுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்குமே?!