Published:Updated:

`ஆர்.எஸ்.எஸ்-ஸைப் புகழ்ந்த மம்தா; பதிலுக்குப் பாய்ந்த பாஜக!' - என்ன நடந்தது?

மம்தா பானர்ஜி

``ஆர்.எஸ்.எஸ்-ஸில் நல்லவர்களும் இருக்கிறார்கள், அதேசமயம் பா.ஜ.க-வை ஆதரிக்காத பலரும் இருக்கிறார்கள். " - மம்தா பானர்ஜி

`ஆர்.எஸ்.எஸ்-ஸைப் புகழ்ந்த மம்தா; பதிலுக்குப் பாய்ந்த பாஜக!' - என்ன நடந்தது?

``ஆர்.எஸ்.எஸ்-ஸில் நல்லவர்களும் இருக்கிறார்கள், அதேசமயம் பா.ஜ.க-வை ஆதரிக்காத பலரும் இருக்கிறார்கள். " - மம்தா பானர்ஜி

Published:Updated:
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த புதன்கிழமையன்று, ``ஆர்.எஸ்.எஸ் முன்பு அவ்வளவு மோசமாக ஒன்றுமில்லை. இப்போதும் அவர்கள் மோசமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ஸில் நல்லவர்களும் பலர் இருக்கிறார்கள், அதேசமயம் பா.ஜ.க-வை ஆதரிக்காதவர்களும் அதில் இருக்கிறார்கள். அத்தகையவர்களும் ஒருநாள் தங்களின் மௌனத்தைக் கலைப்பார்கள்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மம்தாவின் இத்தகைய கருத்துக்கு அரசியல் கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

அந்த வகையில் மம்தாவின் கருத்து குறித்து நேற்று பேசிய AIMIM தலைவர் ஒவைசி, ``2003-ம் ஆண்டிலும் மம்தா, ஆர்.எஸ்.எஸ்-ஸை `தேசபக்தர்கள்' என்று அழைத்திருந்தார். அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்-ஸும் அவரை `துர்கா' என்று அழைத்தது. உண்மையில், ஆர்.எஸ்.எஸ் இந்து ராஷ்டிரத்தை விரும்புகிறது. அதன் வரலாறு முழுவதும் முஸ்லிம் விரோத வெறுப்புக் குற்றங்களால் நிறைந்திருக்கிறது. மேலும் மம்தா, குஜராத் படுகொலைக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசை ஆதரித்தார்" எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும், ``மம்தா, ஆர்.எஸ்.எஸ்-ஸைப் புகழ்வது இதுவொன்றும் முதன்முறையல்ல" எனக் கூறியிருந்தார்.

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

மேலும் இந்த விவகாரத்தில் மம்தாவைச் சந்தர்ப்பவாதி எனக் குறிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜன் சக்ரபர்த்தி, ``இதன் மூலம் பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கைக்குரியது அல்ல என்பது மீண்டும் தெளிவாகிறது" எனத் தெரிவித்தார்.

பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், ``ஆர்.எஸ்.எஸ் அல்லது பா.ஜ.க-வுக்கு, மம்தாவின் சான்றிதழ் தேவையில்லை" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.