Published:Updated:

``தமிழகத்தில் இரண்டு சூரியன்கள்" - ஆளுநருக்கு ஆதீனம் வாழ்த்து; கறுப்புக் கொடி காட்டிய அமைப்பினர்

ஆளுநர் ரவி - தருமபுர ஆதினம்

தருமபுர ஆதீனம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு 1,850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

``தமிழகத்தில் இரண்டு சூரியன்கள்" - ஆளுநருக்கு ஆதீனம் வாழ்த்து; கறுப்புக் கொடி காட்டிய அமைப்பினர்

தருமபுர ஆதீனம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு 1,850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Published:Updated:
ஆளுநர் ரவி - தருமபுர ஆதினம்

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை, செய்து சுவாமி, காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அம்பாள் சந்நிதிகளில் தரிசனம் செய்தார். அதன்பின் தருமபுர ஆதினத்துக்கு வந்தார் ஆளுநர் ரவி.

ஆதீனம்
ஆதீனம்

அப்போது மன்னம்பந்தல் என்ற இடத்தில் தமிழக ஆளுநர் செல்லும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், பல்வேறு அமைப்பினர்  சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பினர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை கண்டித்தும், ஆளுநரை திரும்பச் செல்ல வலியுறுத்தி கறுப்புக்கொடி ஏந்தியும்  முழக்கமிட்டனர்.  அப்போது ஆளுநர் பார்வைக்கு போராட்டக்காரர்கள் படாத வகையில் காவல்துறை வாகனத்தை கொண்டு வந்து மறைத்து நிறுத்தினர். இதனால்  போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடியை சாலையில் எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து தருமபுர ஆதின மடத்துக்கு வந்தஆளுநருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பளித்தனர். தருமபுரம் ஆதினம் வாசலில் ஆளுநருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.  தருமபுர ஆதினத்தின்  மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை  சந்தித்து ஆசி பெற்றார்.  ஆளுநருக்கு தருமையாதீனம் நடராஜர் உருவச்சிலையை நினைவுப்பரிசாக  வழங்கினார். அதனையடுத்து தருமபுர ஆதினத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார்.

கருப்புக்கொடி போராட்டம்
கருப்புக்கொடி போராட்டம்

கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தருமபுர ஆதினம் , "தருமபுர ஆதின அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 800 மாணவர்கள் பயிலும் முதல் பள்ளியாக உள்ளது. தமிழக ஆளுநரின்  பெயர் ரவி. ரவி என்றால்   சூரியன். ஆளுகிற ஆட்சியாளர்களின் சின்னமும் சூரியனாக உள்ளதால் தமிழகத்திற்கு இரண்டு சூரியன்கள் உள்ளன. மறதி ஒரு வரம். மறதி இருந்தால் மட்டுமே மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியும், பசுக்களைப் பராமரிக்க வேண்டும்.  கால்நடைகளை சரியாக பராமரிக்காததால் கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை  நீக்கியதால்தான் பண்பாடு மற்றும் கலாசார சீர் கெட்டுப் போயுள்ளது. அதனால் கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ரவி, "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதால் தருமபுரம் குருமகா சந்நிதானத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு உள்ளவர்களை பார்க்கும்போது உண்மையான இந்தியா என் கண்முன்னே தெரிகிறது. இந்திய நாடு வளமான நாடு. தருமபுர ஆதினம் நாட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருவது சிறப்பானது. குறிப்பாக கொரோனா போன்ற இயற்கை இடர்பாடுகள், கார்கில் போர் போன்ற இக்கட்டான தருணங்களில் தாமாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தது பாராட்டுக்குரியது. இந்தியாவின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், கலாசாரம் பண்பாடு நாகரிகம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.

``தமிழகத்தில் இரண்டு சூரியன்கள்" - ஆளுநருக்கு ஆதீனம் வாழ்த்து; கறுப்புக் கொடி காட்டிய அமைப்பினர்

உலகில் உள்ள மக்கள் இயற்கை இடர்பாடுகள் மற்றும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அனுதினமும் சந்தித்து வருகிறார்கள். இதற்குத் தீர்வு நாகரீகம், கலாசாரம், கல்வி, நீதி போதனைகள், பண்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே முடியும். மதத்தால், மொழியால், உணவால் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம். இந்தியாவினுடைய ஆன்மீகம் தமிழகத்திலிருந்து தொடங்கப்பட்டது. அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

தொடர்ந்து தருமபுர ஆதீனம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு 1,850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism