Published:Updated:

``இந்தியாவில் யாரும் ஹிட்லராக இருக்க முடியாது, அப்படி இருந்தால்..!" - மோகன் பகவத் சொல்வதென்ன?

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

``அனைவருமே இன்று உலகச் சந்தையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியா மட்டுமே `உலகமே ஒரே குடும்பம்' எனப் பேசுகிறது." - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

``இந்தியாவில் யாரும் ஹிட்லராக இருக்க முடியாது, அப்படி இருந்தால்..!" - மோகன் பகவத் சொல்வதென்ன?

``அனைவருமே இன்று உலகச் சந்தையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியா மட்டுமே `உலகமே ஒரே குடும்பம்' எனப் பேசுகிறது." - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

Published:Updated:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸி உள்ளிட்ட முஸ்லிம் மத குருக்களை நேரில் சந்தித்தார். அந்தச் சந்திப்புக்குப் பின்னர், இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸி, மோகன் பகவத்தை `தேசப்பிதா' என்றும், `நாம் அனைவரும் ஒன்றுதான்' என்றும் தெரிவித்திருந்தார்.

தலைமை இமாம் உமர் அகமது இல்யாஸி
தலைமை இமாம் உமர் அகமது இல்யாஸி
ட்விட்டர்

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், `நம்முடைய தேசியம் யாருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது' என்று தெரிவித்திருக்கிறார்.

சங்கல்ப் அறக்கட்டளைக் குழுவால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், ``நம்முடைய தேசியம் மற்றவர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. அது நம்முடைய இயல்பும் அல்ல. ஏனெனில், இந்த உலகமே ஒரே குடும்பம் என்பதைத்தான் நம் தேசியம் பரிந்துரைக்கிறது. இதன் மூலம் உலக மக்களிடையே இந்த உணர்வை அதிகரிக்கச் செய்ய முடியும்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

அனைவருமே இன்று உலகச் சந்தையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியா மட்டுமே `உலகமே ஒரே குடும்பம்' எனப் பேசுகிறது. பேசுவதோடு மட்டுமல்லாமல், உலகை ஒரே குடும்பமாக மாற்றுவதற்கும் நாங்கள் உழைக்கிறோம். மேலும், இந்தியாவில் யாரும் ஹிட்லராக இருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தாலும், நாட்டு மக்கள் அவரை வீழ்த்துவார்கள்" என்று கூறினார்.