Published:Updated:

`ஸ்டாலின் முதல்வராவதற்கு வாய்ப்பே இல்லை!' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

`முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கான யோகம் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது'.

Rajedra Balaji
Rajedra Balaji

`நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க மீதுள்ள கோபத்தில்தான் தி.மு.க வெற்றிபெற்றதே தவிர, தி.மு.க-வுக்கு மக்கள் விரும்பி வாக்களிக்கவில்லை'' என தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Rajedra Balaji
Rajedra Balaji

அ.தி.மு.க-வின் சார்பில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா, நேற்று (19.09.19) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``அறிஞர் அண்ணாவைப் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க-விற்கு மட்டுமே உரிமையுள்ளது. தி.மு.க-வுக்கு அதற்கான தகுதி இல்லை. அண்ணாவின் பெயரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க-வை எவராலும் அசைக்க முடியாது.

நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க மீதுள்ள கோபத்தில்தான் தி.மு.க வெற்றிபெற்றதே தவிர, தி.மு.க-வுக்கு மக்கள் விரும்பி வாக்களிக்கவில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மதச் சண்டையைத் தூண்டியே வாக்கு பெற்ற கூட்டம் தி.மு.க. மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயன்றால், அதை நிச்சயமாக அ.தி.மு.க எதிர்த்து நிற்கும்.

`கவனமா பேசுங்க!' - ராஜேந்திர பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி
Rajedra Balaji
Rajedra Balaji

ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை; முதல்வராவதற்கு வாய்ப்பே இல்லை. முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கான யோகம் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க-வை அசைக்க ஸ்டாலின் அப்பா கருணாநிதியாலேயே முடியவில்லை. ஸ்டாலினாலும் நிச்சயமாக முடியாது.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுதும் அ.தி.மு.க அமோக வெற்றிபெறும். அதற்காக, மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறியும் பணியைத் தொடர உள்ளோம்" என்றார் அவர்.