Published:Updated:

`தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் என்ற பேச்சுக்கே இடமில்லை!’ - சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன்
சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன்

`என்னுடைய 25ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இதுவரை ஒரு மரத்தைக்கூட நான் வெட்டியது இல்லை’ - அமைச்சர் மெய்யநாதன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சேர்ந்தன்குடியில் சுற்றுச்சூழல் ஆர்வலர், மரங்களின் காவலர் எனப் போற்றப்படும் மரம் தங்கசாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், திமுக மாநில சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்குள்ள கற்பகவனச் சோலையில் அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

அதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழக அரசு மரங்களை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்துவருகிறது. என்னுடைய 25 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இதுவரை ஒரு மரத்தைக்கூட நான் வெட்டியது இல்லை. தமிழகம் முழுவதும் அனைவரும் சேர்ந்து மரங்களை நடவும் வளர்க்கவும் முன்வர வேண்டும்.

`தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் என்ற பேச்சுக்கே இடமில்லை!’ - சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன்

குறைந்தது ஒவ்வொருவரும் ஐந்து மரங்களையாவது நடவு செய்து அதை போட்டோ எடுத்து பதிவு செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களிலும், கடலூர் மாவட்டங்களில் ஐந்து இடங்களிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற, தமிழக சுற்றுச்சூழல்துறையிடம் மத்திய அரசு அனுமதி கேட்டபோது, தர முடியாது என்று கூறி மறுத்துவிட்டோம். தமிழகத்தில் எந்த ஓர் இடத்திலும்கூட ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக ஏற்கெனவே மாநில அளவிலான பசுமைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்து மாவட்ட அளவிலான குழுக்கள் விரைவில் அமைக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு