Published:Updated:

``விடுதலைப் புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை'' - சொல்கிறார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

அதிபர் கோத்தபய ராஜபக்சே

`இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அரசியல், சமூகக் கலவரமாக மாறிவிட்டது' என கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

``விடுதலைப் புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை'' - சொல்கிறார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

`இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அரசியல், சமூகக் கலவரமாக மாறிவிட்டது' என கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர், கடந்த 2009-ம் ஆண்டு, மே 18-ம் தேதி முடிவடைந்தது. அந்த நாள் போரில் உயிரிழந்த வீரர்களைப் போற்றி நினைவுகூரும் வகையில், போர் வீரர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், `` நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவப் படைகளை எந்தச் சூழ்நிலையிலும் மறக்க முடியாது. நமது படைகள், மனிதாபிமான நடவடிக்கை மூலம் போரை முடித்து, அமைதியைக் கொண்டுவந்தன. அந்தப் போரில், வெறுப்புணர்வோ, கோபமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இருந்ததில்லை. அப்படி அமைதி உருவாக்கப்பட்ட நாட்டில் இனவெறிக்கோ, எந்தவகையான பயங்கரவாதத்துக்கோ இடமில்லை. இதுதான் இலங்கையின் தனித்த பண்பாடு.

கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே

வெளிநாட்டு குழுக்களை முறியடிக்க வேண்டும். தற்போது நாம் சந்தித்துவரும் சூழ்நிலையை யாருமே எதிர்பார்க்கவில்லை. பொருளாதார நெருக்கடி, அரசியல், சமூகக் கலவரமாக மாறிவிட்டது. எந்தச் சூழ்நிலையிலும், நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் கொள்கையைக் கைவிட மாட்டோம்.

பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டுக் குழுக்களும், தனிநபர்களும் தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தி, தேசப் பாதுகாப்பை குழிதோண்டி புதைக்க முயல்வதில் சந்தேகமே இல்லை. நாம் ஒன்று சேர்ந்து அதை முறியடிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism