Published:Updated:

`பொருளாதார மந்தநிலையா.. இந்தப் படங்களின் வசூல் தெரியுமா?’- ரவிசங்கர் பிரசாத் புது விளக்கம்

மத்திய அரசுக்கு தேவையான பல்வேறு விவகாரங்கள் குறித்த மாதிரி தரவுகளை இந்த என்எஸ்எஸ்ஓ என்னும் அரசு நிறுவனம் திரட்டி ஆய்வு செய்து வருகிறது.

ரவி சங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத்

சட்டம் மற்றும் நீதி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் நான் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தேன். அதனால் எனக்கு படம் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அக்டோபர் 2-ம் தேதி மூன்று படங்கள் வெளியாகியுள்ளன.

ரவி சங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத்

திரைப்பட விமர்சகர், கோமல் நட்டா என்னிடம், `தேசிய விடுமுறை நாளான 2-ம் தேதி வார், ஜோக்கர், சைரா உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அவை 120 கோடி ரூபாய் வசூலை குவித்தது’ என்றார். பொருளாதாரம் சீராக இருப்பதால் மட்டுமே திரைப்படங்கள் ஒரேநாளில் 120 கோடியை லாபமாக ஈட்ட முடியும்” என்றார். தேசிய மாதிரி புள்ளிவிவர ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தேர்தலுக்குப்பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், `இந்தியாவில் கடந்த நான்கு தசாப்தகாலங்களில் இல்லாத அளவுக்கு 2017-18-ம் காலக்கட்டத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1 சதவீதத்தை அடைந்துவிட்டது’ என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு தேவையான பல்வேறு விவகாரங்கள் குறித்த மாதிரி தரவுகளை இந்த என்எஸ்எஸ்ஓ என்னும் அரசு நிறுவனம் திரட்டி ஆய்வு செய்து வருகிறது. இதை மறுத்து பேசிய ரவிசங்கர் பிரசாத், ``என்எஸ்எஸ்ஓ அறிக்கை தவறானது என்பதை முழுப்பொறுப்போடு நான் பதிவு செய்கிறேன். இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்பதற்கான 10 விதமான தரவுகளை என்னால் கொடுக்கமுடியும்.

ரவி சங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத்

அந்த தரவுகள் எதுவும் அந்த அறிக்கையில் இல்லை. மின்னணுவியல் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத்துறை, முத்ரா கடன் திட்டம், வணிகத்துறை உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எல்லோருக்கும் அரசு வேலைகிடைக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. ஆனால், சிலர் வேண்டுமென்றே பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றனர்” என்றார்.