Published:Updated:

``அண்ணாமலையை விமர்சிப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் இவர்கள்...” - கரு.நாகராஜன் காட்டம்

கரு.நாகராஜன்

“தி.மு.க., அ.தி.மு.க-வில் நடந்து கொண்டிருக்கும் கோஷ்டி பூசல்களோடு ஒப்பிடும் போது எங்கள் கட்சியில் பாயின்ட் ஜீரோ ஜீரோ பெர்சன்டேஜ்தான்” - கரு.நாகராஜன்

``அண்ணாமலையை விமர்சிப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் இவர்கள்...” - கரு.நாகராஜன் காட்டம்

“தி.மு.க., அ.தி.மு.க-வில் நடந்து கொண்டிருக்கும் கோஷ்டி பூசல்களோடு ஒப்பிடும் போது எங்கள் கட்சியில் பாயின்ட் ஜீரோ ஜீரோ பெர்சன்டேஜ்தான்” - கரு.நாகராஜன்

Published:Updated:
கரு.நாகராஜன்

தி.மு.க-உடன் வாட்ச் சண்டை... அ.தி.மு.க-உடன் கூட்டணி சண்டை... கட்சிக்குள் கோஷ்டி பூசல்... என தடதடத்து இருக்கிறது தமிழக பா.ஜ.க. இந்த நிலையில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனை அவரின் அலுவலகத்தில் சந்தித்து சமகால அரசியல் நிகழ்வுகளோடு கேள்விகளை முன் வைத்தேன்.

``உங்கள் வாட்ச் என்ன விலை... ஏனென்றால் அதுதான் கடந்த வார ட்ரெண்டிங்..?!”

``(பலமாக சிரித்தவர்...) என்னிடம் இரண்டு மூன்று வட்ச்கள் இருக்கிறது. அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை”

செந்தில் பாலாஜி - அண்ணாமலை
செந்தில் பாலாஜி - அண்ணாமலை

``வாட்ச்சின் விலை கேட்டதும் சிரிக்க கூடிய அளவுக்கு உங்கள் மாநில தலைவர் செய்துவிட்டாரா?”

``அதற்காக சிரிக்கவில்லை... இன்று நாட்டில் மக்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு தி.மு.க-வினர் இந்த வாட்ச் விவகாரத்தை வைத்து பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்களே என்று நினைக்கும் போதுதான் நகைப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இதில் எங்கள் மாநில தலைவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. தி.மு.க-வினர்தான் மாட்டி கொண்டிருக்கிறார்கள்”

``தி.மு.க-வினர் மாட்டி கொண்டார்களா, அல்லது உங்கள் தலைவரா...?”

``இந்த வாட்ச்க்கு மட்டுமல்ல, அவர் பணியிலிருந்த கடந்தகால வரவு செலவுக் கணக்குகளை வெளியிடுவதாக சொல்லி இருக்கிறார். இதை பார்க்கும் மக்கள் சும்மா இருப்பார்களா. அண்ணாமலையிடம் பில் கேட்ட தி.மு.க அமைச்சர்களிடமும் கணக்கு கேட்பார்கள் இல்லையா. எங்கள் தலைவர் வெளியிட துணிந்துவிட்டார். அதுபோல் தி.மு.க-வில் அவர்களது கணக்குகளை வெளியிட தைரியம் இருக்கிறதா?”

கமலாலயம்
கமலாலயம்

``காங்கிரஸை தொடர்ந்து பா.ஜ.க கோஷ்டி பூசல் கட்சி என்று விமர்சனம் செய்து வருகிறது. ஆனால், இன்று தமிழக பா.ஜ.க-விலும் கோஷ்டி பூசல் தலை தூக்கி இருப்பதாக சொல்லப்படுகிறதே?”

``இது எல்லாம் கற்பனை கதை... சின்ன சின்ன பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் இல்லாமல் எந்த கட்சியும் இருக்காது. தி.மு.க., அ.தி.மு.க-வில் நடந்து கொண்டிருக்கும் கோஷ்டி பூசல்களோடு ஒப்பிடும் போது எங்கள் கட்சியில் பாயின்ட் ஜீரோ ஜீரோ பெர்சன்டேஜ்தான்”

மோடி கபடி லீக் போட்டி நிகழ்ச்சி
மோடி கபடி லீக் போட்டி நிகழ்ச்சி

``அப்போது கோஷ்டி பூசல் இருப்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்?”

“சிலர் பிரமையில், ‘நீங்கள் எனக்கு எதிராகவே வேலை செய்கிறீர்கள்...’ என்று நினைத்துக் கொண்டிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று தமிழக பா.ஜ.க-வில் துடிப்பாகவும், உற்சாகமாகவும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், தி.மு.க-வுக்கு எதிரான போராட்டங்கள் என களப்பணியில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே இது போன்ற சதி குற்றச்சாட்டுகளுக்கு செவிமடுக்க அவசியமில்லை”

“விளையாட்டு போட்டிகள், நிகழ்ச்சிகள் என்று சொன்னீர்கள். ஏற்கனவே ‘மோடி கபடி’ போட்டி நடத்தியதில் சரியான கணக்கு வரவில்லை, மோசடி செய்ததாக பா.ஜ.க-வுக்குள் இருந்தே புகார்கள் அடுக்குகிறார்களே...?”

“மோடி கபடி போட்டி சர்வதேச தரத்துக்கு நடத்திய காழ்ப்புணர்ச்சியில் தி.மு.க-வினர்தான் பேசுகிறார்கள். இதற்கான கணக்கு வழக்குகள் விளையாட்டுப் போட்டி நடத்திய பிரிவுக்கும், மாநில தலைவருக்கும் கொடுத்திருப்பார்கள். அதில் ஏதும் குற்றம் குறை ஆதாரத்துடன் இருந்தால் அது சரி செய்யப்படும். தவறு செய்திருந்தால் அவர்களுக்கான தண்டனை நிச்சயம் இருக்கும்”

பா.ஜ.க
பா.ஜ.க

“ஆதாரத்தோடுதானே குற்றச்சாட்டுகள் முன் வைக்கிறார்கள்..?”

“அந்த ஒரு லட்ச ரூபாய் ரசீதில் யாரிடம் பணம் வாங்கி இருக்கிறார்கள்... போலியாக ரசீது தயார் செய்ய முடியாதா... போலியோ சான்றிதழ், பாஸ்போர்ட் தயார் செய்கிறார்கள். அது போல் இதுவும் இருக்கலாம் அல்லவா? எனவே இதெல்லாம் ஓர் அப்பட்டமான பொய் பிரசாரம். ஏனென்றால் இதைவிட பெரிய கபடி போட்டியின் இறுதி போட்டி தஞ்சாவூரில் நடக்கும் என்று தலைவர் அறிக்கைவிட்டார். அடுத்த போட்டி ஆரம்பித்து அதிலும் பெரிய வெற்றி பெற்று மக்களிடம் சென்று சேர்ந்துவிடுவார்களோ என்கிற பொறாமையில் தி.மு.க-வின் பொய்யாக சில தகவல்கலை பரப்பி வருகிறார்கள். இதையெல்லாம் புறம்தள்ளி எங்கள் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக உழைக்கிறார்கள்”

பா.ஜ.க.வினர்
பா.ஜ.க.வினர்

``ஆனால், சீனியர்கள் பெரும்பாலானோர் உற்சாகத்தில் இல்லை என்கிறார்களே?”

``அப்படி எல்லாம் ஏதும் இல்லை... பா.ஜ.க-வை பொறுத்தவரை சீனியர், ஜூனியர் என்கிற வேறுபாடுகள் எல்லாம் கிடையாது. எல்லோரும் இணைந்துதான் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணன் ஹெச்.ராஜா, அண்ணன் சி.பி.ஆர், சகோதரி வானதி சீனிவாசன் என எல்லோருமே மக்களுக்கான வேலைகளையும், கட்சி வேலைகளையும் அவர்களிடத்தில் இருந்து செயலாற்றிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். கட்சியின் வளர்ச்சியை பார்த்து சும்மா ஒரு கல்லை தூக்கி போட்டு குளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்த நினைக்கிறார்கள். எந்த அதிர்வாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது”

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

“தொடர்ந்து தமிழக பா.ஜ.க-வின் வார் ரூம் சர்ச்சைக்குள்ளாகிறதே... அதற்கான நிதி எல்லாம் எங்கிருந்து வருகிறது?”

``பா.ஜ.க என்ன சின்ன கட்சியா... தேசிய கட்சி. மத்தியில் ஆளும் கட்சி. கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நாலு பேருக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் ஒன்றுமில்லை. அதேவேளையில் தனி நபருக்காக எல்லாம் இயங்கவுமில்லை. கட்சிக்காகத்தான் இயங்குகிறது. தனிமனித வளர்ச்சி பற்றி தமிழ்நாட்டில் பேசுவது அபத்தம். ஏனென்றால் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என எல்லோரும் தனிமனித வளர்ச்சி மட்டுமே அரசியல், தனிமனித வளர்ச்சி மட்டுமே வெற்றி, தனி மனித பிரபலம் மட்டுமே தேர்தல் என்று பார்த்தவர்கள். எனவே எங்கள் தலைவரை தனிமனித வளர்ச்சி என்று விமர்சிப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் இவர்கள்”