Published:Updated:

``நாட்டில் மதவெறி வளர்ந்தால் அது தேசத்தையே அழித்துவிடும்!" - பாஜக மீது தெலங்கானா முதல்வர் தாக்கு

கே.சந்திரசேகர ராவ்

``அவர்கள்(பாஜக) தங்கள் குறுகிய நலன்களுக்காக சமூக உறவுகளில் முட்களை விதைக்கிறார்கள்." - தெலங்கானா முதல்வர்

``நாட்டில் மதவெறி வளர்ந்தால் அது தேசத்தையே அழித்துவிடும்!" - பாஜக மீது தெலங்கானா முதல்வர் தாக்கு

``அவர்கள்(பாஜக) தங்கள் குறுகிய நலன்களுக்காக சமூக உறவுகளில் முட்களை விதைக்கிறார்கள்." - தெலங்கானா முதல்வர்

Published:Updated:
கே.சந்திரசேகர ராவ்

2024-ல் பா.ஜ.க அல்லாத ஆட்சியை அமைப்பதற்காக, எதிர்க்கட்சிகளை இப்போதே ஒன்றுதிரட்டுவதற்கான வேலைகளைச் செய்துவருவதில், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒருபக்கம் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். அதோடு நின்றுவிடாமல், பிரதமர் மோடியையும், பா.ஜ.க-வையும் கடுமையாகச் சாடியும் வருகிறார். மேலும், தெலங்கானாவுக்கு மோடி வருகைதரும்போதெல்லாம், அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் வேண்டுமென்றே புறக்கணித்து தன்னுடைய எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்.

ஸ்டாலின், மம்தாவுடன் சந்திரசேகர் ராவ்
ஸ்டாலின், மம்தாவுடன் சந்திரசேகர் ராவ்

இன்று தெலுங்கானா தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்படும் இதே நாளில், தெலங்கானாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதல்வர் சந்திரசேகர ராவும் தனித்தனி நிகழ்ச்சிகளில் ஒருவரையொருவர் விமர்சித்துக்கொண்டனர்.

அமித் ஷா
அமித் ஷா

தெலுங்கானா தேசிய ஒருமைப்பாடு தினம் என்ற பெயரில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி கொண்டாடும் அதே விழாவை, 'ஹைதராபாத் விடுதலை தினம்' எனக் கொண்டாட வருகைதந்த அமித் ஷா, ``வாக்கு வங்கி அரசியல் காரணமாகத் தெலங்கானாவில் இத்தனை ஆண்டுகளாக 'ஹைதராபாத் விடுதலை நாள்' அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது" என டி.ஆர்.எஸ்-ஐ மறைமுகமாக விமர்சித்தார்.

கே.சந்திரசேகர ராவ்
கே.சந்திரசேகர ராவ்

அதைத்தொடர்ந்து தற்போது ஐதராபாத்தில் தேசியக் கொடியை ஏற்றி விழாவில் உரையாற்றிய சந்திரசேகர ராவ், ``நாட்டில் மதவெறி வளர்ந்தால், அது தேசத்தின் வாழ்க்கையையே அழித்து, மனித உறவுகளைச் சீர்குலைத்துவிடும். அவர்கள்(பாஜக) தங்கள் குறுகிய நலன்களுக்காக சமூக உறவுகளில் முட்களை விதைக்கிறார்கள். அதோடு தங்களின் நச்சுக் கருத்துகளால் மக்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்புகிறார்கள். மக்களிடையே அவர்கள் செய்யும் இந்த வகையான பிரிவினையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என பா.ஜ.க-வைச் சாடியிருக்கிறார்.

நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த ஹைதராபாத் மாநிலம் 1948-ல் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்ட நாளான செப்டம்பர் 17-ஐ, தெலங்கானா அரசு கடந்த செப்டம்பர் 3-ம் தேதி தெலங்கானா தேசிய ஒருங்கிணைப்பு தினமாகக் கொண்டாட முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.