Published:Updated:

``சி.பி.எஸ்.இ பெயரில் புதிய கல்விக் கொள்கையை நுழைக்க முயல்கின்றனர்!” - தமிழிசையை சாடும் நாராயணசாமி

தமிழிசை - நாராயணசாமி

”தமிழ் தமிழ் எனப் பேசி, சி.பி.எஸ்.இ மூலம் புதிய கல்விக் கொள்கையை நுழைக்க நினைக்கிறார் ஆளுநர் தமிழிசை.” – புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

``சி.பி.எஸ்.இ பெயரில் புதிய கல்விக் கொள்கையை நுழைக்க முயல்கின்றனர்!” - தமிழிசையை சாடும் நாராயணசாமி

”தமிழ் தமிழ் எனப் பேசி, சி.பி.எஸ்.இ மூலம் புதிய கல்விக் கொள்கையை நுழைக்க நினைக்கிறார் ஆளுநர் தமிழிசை.” – புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

Published:Updated:
தமிழிசை - நாராயணசாமி

தனி கல்வி வாரியம் இல்லாத யூனியன் பிரதேசமான புதுச்சேரி, தற்போதுவரை தமிழக பாடத் திட்டங்களைத்தான் பின்பற்றி வருகிறது. அதேபோல மாஹே பிராந்தியத்தில் கேரள பாடத்திட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம் வேண்டுமென்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்போதுவரை அதற்கான முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. 2011 தேர்தலில் பா.ஜ.க கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்தார் ரங்கசாமி. பின்னர், 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க வந்ததும், புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்புக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

நாராயணசாமி
நாராயணசாமி

அதற்கடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ விரிவாக்கம் செய்யப்பட்டு, 2018 - 2019 கல்வியாண்டில் 5-ம் வகுப்புக்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.பி பாடத்திட்டத்தையும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக பாடத்திட்டத்தையும் படித்துவந்தனர் புதுச்சேரி மாணவர்கள். இந்நிலையில் பிளஸ் டு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை செய்துவருகிது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு. ஆனால் புதிய கல்விக் கொள்கையை நுழைப்பதற்காகவே சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அரசு விரிவாக்கம் செய்வதாக குற்றம்சுமத்தி வருகின்றனர் பெற்றோர்களும், கல்வியாளர்களும்.

இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவெடுத்திருக்கும் புதுச்சேரி கல்வித்துறை, சி.பி.எஸ்.இ இணைப்புக்கு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் விண்ணப்பிப்பதுடன் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறது. அது தொடர்பாக கல்வித்துறையின் இணை இயக்குநர் சிவகாமி பள்ளிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், “புதுச்சேரி அரசின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களை இன்று 21.12.2022 மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணைப்புக்குத் தேவையான ஆவணங்களில் பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பு, தீ பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு உள்ளிட்டவை இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்தி, தமிழை அழிக்கும் வேலையை செய்கிறார் ஆளுநர் தமிழிசை. இதன்மூலம் இந்தி மொழிதான் திணிக்கப்படும். இது புதிய கல்விக் கொள்கையை நுழைக்கும் வேலை. ஆனால் தமிழ் தமிழ் எனப் பேசி மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஆளுநர். அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு எதிராகப் போராடுவோம்” என்று தெரிவித்தார்.