Published:Updated:

சாமியைக் கும்பிட்டுவிட்டு... கோயிலில் இருந்த உண்டியலைத் திருடிச் சென்ற திருடன்! | Video

அம்மன் கோயில் ( ட்விட்டர் )

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள அம்மன் கோயிலில் ஒரு நபர் விசித்திரமான முறையில் திருட்டில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள அம்மன் கோயிலில் திருடன் ஒருவன் விசித்திரமான முறையில் திருட்டில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அப்படி என்ன செய்தார் என்று பார்த்தால்.... மற்ற திருடர்களைப்போலவே இந்தத் திருடனும் கோயிலில் காணிக்கை உண்டியலைத் திருட வந்திருப்பது அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அவர் திருடுவதற்கு முன்பு அம்மனைக் கும்பிட்டுவிட்டு திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது, வீடியோவில், திருடன் அம்மன் சிலையின் முன்பு கைகளைக் கூப்பி வணங்குவதைக் காணலாம்.

அம்மன் கோயில்
அம்மன் கோயில்
ட்விட்டர்

மேலும் கோயிலுக்குத் திருட வந்த நபர் உண்டியல் பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்கிறார். இதுமட்டுமல்லாமல், உண்டியல் பெட்டிகளைத் தவிர, கோயிலில் இருந்த இரண்டு பெரிய மணிகள், கோயில் சொத்துகள், அம்மனுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட சில விலையுயர்ந்த பொருள்களையும் திருடன் திருடிச் சென்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டுவருகிறது.