Published:Updated:

ராகுல் நடைப்பயணத்தில் புகுந்த பிட்பாக்கெட் திருடர்கள்... போட்டோ வெளியிட்ட போலீஸ்!

கேரளாவில் ராகுல் காந்தி நடைப்பயணம்

நான்குபேர் கொண்ட பிட்பாக்கெட் கும்பல், இரண்டு இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் சிசிடிவி காட்சிகளும் போலீஸுக்குக் கிடைத்துள்ளன.

ராகுல் நடைப்பயணத்தில் புகுந்த பிட்பாக்கெட் திருடர்கள்... போட்டோ வெளியிட்ட போலீஸ்!

நான்குபேர் கொண்ட பிட்பாக்கெட் கும்பல், இரண்டு இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் சிசிடிவி காட்சிகளும் போலீஸுக்குக் கிடைத்துள்ளன.

Published:Updated:
கேரளாவில் ராகுல் காந்தி நடைப்பயணம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கடந்த 10-ம் தேதி இரவு கேரள எல்லைக்குள் யாத்திரை சென்றது. 11-ம் தேதி காலையில் பாறசாலையிலிருந்து கேரளாவில் நடைப்பயணத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி. கேரளாவில் இரண்டாம் நாளான நேற்று ராகுல் காலையில் நேமம் வெள்ளாயணி ஜங்ஷனிலிருந்து நடைப்பயணத்தை தொடங்கி பட்டத்தில் நிறைவுய்செய்தார். மாலை பட்டத்தில் தொடங்கி களக்கூட்டத்தில் நடைப்பயணத்தை நிறைவு செய்தார். இன்று காலை களக்கூட்டத்திலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டுவருகிறார். நடைப்பயணத்தக்கு இடையே ராகுல் காந்தி விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துப் பேசினார். மேலும் ஒரு வீட்டில் திடீரெனச் சென்று டீ குடித்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

போலீஸ் வெளியிட்ட பிக்பாக்கெட் திருடர்களின் போட்டோ
போலீஸ் வெளியிட்ட பிக்பாக்கெட் திருடர்களின் போட்டோ

இந்த நிலையில் நேற்று காலை ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்துகொண்ட இரண்டு பேரின் பர்ஸுகள் திருடப்பட்டிருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிசிடிவி கேமராவில் போலீஸார் ஆய்வு செய்தபோது ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் மக்களுடன் மக்களாக பிக்பாக்கெட் திருடர்கள் புகுந்ததது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்குபேர் கொண்ட பிக்பாக்கெட் கும்பல் இரண்டு இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் சிசிடிவி காட்சிகளும் போலீஸுக்குக் கிடைத்துள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
களக்கூட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்
களக்கூட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்

அவர்கள் நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் மீது காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், போலீஸ் லிஸ்ட்டில் அவர்கள் பெயர்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கேரளா போலீஸார் சிசிடிவி கேமராவில் பதிவான நான்கு பிக்பாக்கெட் திடுடர்களின் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்களைக் கைதுசெய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.