Published:Updated:

சென்னை மாநகராட்சி வரலாற்றில் 3-வது பெண் மேயர்! - யார் இந்த பிரியா ராஜன்?

பிரியா ராஜன்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்குப் பிரியா ராஜன் போட்டியிடுவதாக தி.மு.க அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வரலாற்றில் 3-வது பெண் மேயர்! - யார் இந்த பிரியா ராஜன்?

பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்குப் பிரியா ராஜன் போட்டியிடுவதாக தி.மு.க அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Published:Updated:
பிரியா ராஜன்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு, பிரியா ராஜன் போட்டியிடுவதாக தி.மு.க அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார். நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 74-வது வார்டில் போட்டியிட்டார் பிரியா. தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 6,299‬ வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அமைச்சர் சேகர் பாபு ஆதரவால் பிரியா ராஜனின் பெயர் மேயர் பட்டியலில் தேர்வாகியிருப்பதாக தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரியா ராஜன்
பிரியா ராஜன்

இந்த முறை சென்னை மேயர் பதவி எஸ்.சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பிரியா ராஜன் சென்னையில் மூன்றாவது பெண் மேயராகப் பதவியேற்கவிருக்கிறார். அதோடு, வடசென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர் என்ற பெருமையும் பிரியா ராஜனுக்கே வந்து சேரும். இதற்கு முன்பு தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் மேயராகத் தேர்வாகி வந்தார்கள். இவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாளை நடைபெறவிருக்கும் மறைமுகத் தேர்தலில் பிரியா ராஜன் தேர்வுசெய்யப்பட்டு மேயராகப் பதவியேற்பார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மகேஷ்குமார், சைதை பகுதியில் வரும் தாடண்டன் நகர், சின்னமலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 169-வது வார்டு கவுன்சிலர். இவர் மாமனார் பவளவண்ணன், சைதைப் பகுதியில் பிரபலமான அரசியல் பிரமுகர். அவர் பெயரைத்தான், ஜோன்ஸ் ரோடு சுரங்கப்பாதைக்கு வைத்தாராம் அந்த காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி. பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர், 2006-ல் உறுப்பினராகப் பதவியிலிருந்தவர். இடையில் ஒரு முறை, சைதை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ-வாக போட்டியிட்டுத் தோற்றவர். தற்போதைய சைதை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், சுகாதாரத்துறை அமைச்சருமாக இருப்பவர் மா.சுப்பிரமணியன். சைதை பகுதி தி.மு.க-வில் மா.சு-வுக்கும் மகேஷுக்கும் பனிப்போர் நிலவுவதாகச் சொல்வதுண்டு. ஆனால், வெளிப்படையாக போஸ்டரில் பெயர் போடுவது, மேடைப்பேச்சுகள் என்று மோதிக்கொண்டதில்லை. இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டாம். துணை மேயர் பதவிக்கான ரேஸில் மகேஷ் இறங்கியபோது, அவருக்கு க்ரீன் சிக்னல் காட்டினார் மா.சு.

மகேஷ்குமார்
மகேஷ்குமார்

மகேஷுடம் நாம் பேசியபோது, ``சென்னையைச் சிங்கார சென்னை ஆக மாற்ற வேண்டும் என்பது எங்கள் தலைவரின் கனவு. கடந்த 10 வருடங்களில் அ.தி.மு.க ஆட்சியிலிருந்தபோது சென்னையில் வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்? அடிப்படை வசதிகளைக்கூடச் செய்யவில்லை. தி.மு.க ஆட்சியில் அமர்ந்ததும், வெள்ள பாதிப்பு வந்தது. தமிழக முதல்வர், சென்னையில் தண்ணீர் தேங்கிக்கிடந்த அனைத்துப் பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்யவும், கடலில் வீணாகப் போய்ச் சேரும் தண்ணீரைச் சேமித்து மக்களுக்குப் பயன்படும் வகையில் நிரந்தரத் திட்டங்களை உருவாக்கச் சொல்லி நிபுணர்குழுவை அமைத்து அறிக்கை கேட்டிருக்கிறார். அந்தக் குழுவின் பரிந்துரையைக் கேட்டு, மழைநீர் தேங்காத சென்னையாக ஆக்குவதுதான் என் முதல் லட்சியம்" என்று கூறினார்.