Published:Updated:

``அண்ணாமலை அரசியல் பேசத் தெரியாமல், அவதூறு பேசிவருகிறார்!” - எம்.பி திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

``தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அரசியல் பேசத் தெரியாமல், அரசியல் கட்சி தலைவர்கள் மீது அவதூறு பேசிவருகிறார்” என்று சேலத்தில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

``அண்ணாமலை அரசியல் பேசத் தெரியாமல், அவதூறு பேசிவருகிறார்!” - எம்.பி திருமாவளவன்

``தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அரசியல் பேசத் தெரியாமல், அரசியல் கட்சி தலைவர்கள் மீது அவதூறு பேசிவருகிறார்” என்று சேலத்தில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Published:Updated:
தொல்.திருமாவளவன்

சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வெற்றிபெற்ற, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை நேற்று வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. இதற்கு ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துள்ள போர்தான் காரணம் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.

ஏனென்றால் அங்கு போர் தொடங்குவதற்கு முன்பே இங்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாகத்தான் இருந்துவந்தது. இதெல்லாம் மக்கள்மீது கொஞ்சம்கூட மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்துகின்றன. அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களையும், தனியாருக்குத் தாரை வார்க்கும் வேலைகளை மோடி ஆட்சி முழு மூச்சாகச் செய்துவருகிது. இதைக் கண்டிக்கும்விதமாக இன்றும், நாளையும் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும்” என்றார். மேலும் அவரிடம் முதல்வரின் துபாய் பயணம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது,

அண்ணாமலை
அண்ணாமலை

``முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டிருப்பது நம்பிக்கை தருகிறது. கண்டிப்பாக தமிழகப் பொருளாதர வளர்ச்சிக்கு இந்தப் பயணம் பயனுள்ளதாக இருக்கும். கடந்த 10 மாத தி.மு.க ஆட்சியில் தமிழகத்தை அகில இந்திய அளவில் அனைவரும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அரசியல் பேசத் தெரியாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து அவதூறு பேசிவருகிறார். தன்மீது கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் தி.மு.க-வைப் பற்றியும், முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்தும் விமர்சனம் செய்துவருகிறார்” எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism