Published:Updated:

``ஆர்.எஸ்.எஸ் கொள்கையைத் தீர்மானிக்கும்; அதை பாஜக நடைமுறைப்படுத்தும்" - திருமாவளவன்

வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்

"இப்போது ஒரே கலாசாரம் என்கிறார்கள். இங்கு ஒரே மதமும், ஒரே மொழியும் இருந்தால்தான் ஒரே கலாசாரம் வரும்... இதுதான் பாஜக-வின் நோக்கம்." - திருமாவளவன் காட்டம்.

``ஆர்.எஸ்.எஸ் கொள்கையைத் தீர்மானிக்கும்; அதை பாஜக நடைமுறைப்படுத்தும்" - திருமாவளவன்

"இப்போது ஒரே கலாசாரம் என்கிறார்கள். இங்கு ஒரே மதமும், ஒரே மொழியும் இருந்தால்தான் ஒரே கலாசாரம் வரும்... இதுதான் பாஜக-வின் நோக்கம்." - திருமாவளவன் காட்டம்.

Published:Updated:
வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்

திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, நாகர்கோவிலிலிருந்து சென்னை வரை நடத்தும் பிரசார பயணப் பொதுக்கூட்டம் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்.திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்தப் பயணப் பொதுக்கூட்டத்தில், பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், "சங்கிகள் என்று சொல்கிறோமே... யார் அந்த சங்கிகள்? 'சங்கம்' என்ற சொல்லிலிருந்து வந்ததுதான் `சங்கி’ என்ற சொல். சங்கம் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத்தான் குறிக்கிறது. 'ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்' என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விரிவாக்கம். அதாவது, தேசிய தன்னார்வத் தொண்டு செய்யும் அமைப்பு என்று கூறிவருகிறார்கள்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. அந்த அமைப்பு விதைத்த அரசியல், இன்று இந்திய தேசத்தையே பேய்பிடித்து ஆட்டுகிறது. மிகவும் ஆபத்தான அரசியலை முன்னெடுக்கும் இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். பெரியார், அம்பேத்கர் போன்ற மாமனிதர்களின் சிந்தனைகளுக்கு முற்றிலும் நேர் எதிரான அரசியல் அது. சமத்துவம், சமூகநீதி, உழைக்கும் மக்களுக்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ் அரசியல். பார்ப்பன சமூகப் பிரிவினரின் நலன்களை மட்டுமே மையமாகக்கொண்டு மராட்டிய, குஜராத்திய பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பின் பெயர்தான் ஆர்.எஸ்.எஸ். அதன் நோக்கம், பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் நிலவிவரும் சமூகக் கட்டமைப்பை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தச் சமூக கட்டமைப்பு என்னவென்றால், `பிறப்பால் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள்... மற்ற எல்லோரும் கீழ்ச் சாதியினர்’ என்பதுதான். இதையே ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. "ஆடு, மாடு மேய்ப்பவர்களெல்லாம் அதிகாரத்துக்கு வரத் துடிக்கிறார்கள். அதற்கான சூழல்கள் இங்கே உருவாகிவருகின்றன. அதைத் தடுக்க வேண்டும்... பாமரமக்களும் அதிகாரத்துக்கு வந்துவிட்டால், சிறுபான்மையினரான நாம் பாதிக்கப்பட்டுவிடுவோம்" என்ற எண்ணம்கொண்ட அந்தக் கும்பல், தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கான கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ். அந்த அரசியலைக் கற்று, அரசியல் களத்தில் பணியாற்ற உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கம்தான் பாஜக.

திருமாவளவன்
திருமாவளவன்

பாஜக-வின் இயக்கம் அல்ல ஆர்.எஸ்.எஸ்..! ஆர்.எஸ்.எஸ்-ஸின் கிளை அமைப்புதான் பாஜக. பாஜக-வின் தாய் அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். ஆகவே பாஜக-வுக்கு தனிக் கொள்கை, கோட்பாடு கிடையாது. ஆர்.எஸ்.எஸ் கொள்கையைத் தீர்மானிக்கும்... அதை பாஜக நடைமுறைப்படுத்தும். `ஜனசங்கம்’ அரசியல் களத்தில் எடுபடவில்லை என்பதற்காக பாஜக உருவாக்கப்பட்டது. பாரதிய என்றாலும், ராஷ்ட்ரீய என்றாலும் ஒன்றுதான். இன்று பாஜக முன்னெடுக்கும் கொள்கைத் திட்டம் `ஒரே தேசம்... ஒரே கலாசாரம்.’ இந்தியா என்றால் ஒரே தேசம்தானே... அப்போது ஏன் ஒரே தேசம் என்கிறார்கள்... யாராவது இந்தியாவைத் துண்டாட போகிறார்களா... இல்லை. இந்த முழக்கத்தை வைத்ததற்குக் காரணம், இந்தியாவின் தனித்தன்மையோடு இருந்த ஜம்மு - காஷ்மீர் பகுதியை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். அந்தக் கனவு நனவாகிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது ஒரே கலாசாரம் என்கிறார்கள்... இந்திய நாட்டில் ஏராளமான சமூகங்கள் இருக்கின்றன. ஒரே கலாசாரம் என்றால் அதற்கு என்ன பொருள்... ஒரே மதம்தான் இருக்க வேண்டும் என்று அர்த்தம். மக்களே, பாஜக-வின் இந்த எண்ணம் நியாயமானதா... எவ்வளவு ஆபத்தானது இது! ஆகவே, மதத்தின் அடிப்படையில் இங்கு ஒற்றைக் கலாசாரத்தை நிறுவுவதற்குப் பார்க்கிறார்கள். இங்கு ஒரே மதம், ஒரே மொழி இருந்தால்தான் ஒரே கலாசாரம் வரும். இதுதான் பாஜக-வின் நோக்கம்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

ஆகவே, இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆசிரியர் வீரமணி அவர்கள், இன்று கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து இவ்வாறு வழிநடத்திக்கொண்டிருக்கிறார். அவற்றில் சில, நீட்தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு. அதேபோல சமூகநீதி அரசை வழிநடத்தும் முதல்வர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த என்றும் நாங்கள் உடனிருப்போம்" என்றார்.

வீரமணி
வீரமணி

திருமாவளவன் பேசியதைத் தொடர்ந்து கி.வீரமணி பேசுகையில், ``பெண்கள் கையில்... அடுபங்கரையில் கரண்டிதான் இருக்கணும், பேனா இருக்கக் கூடாதுனு சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ். பெண்களிடமும் அதிகாரத்தைக் கொண்டு சேர்த்ததுதான் திராவிட மாடல். அனைவருக்கும், அனைத்தும் என்பதுதான் சமூகநீதி. திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தை மாறி மாறி ஆளும். பாஜக ஒருபோதும் ஆள முடியாது" என்றார்,

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism