Published:Updated:

"என் பின்னணியில் இருப்பது மகள்தான்!"- திருமுருகன் காந்தி

ஜெ.பிரகாஷ்

இந்த வழக்கில் அவருடைய, அனைத்து மனுக்களையும் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது, நீதிமன்றம்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை, 'அவரை பின்னால் இருந்து யாரும் இயக்குகிறார்களா என முழுமையான விசாரணை நடத்த வேண்டும்' எனக் காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், "என் பின்னணியில் என் மகள்தான் இருக்கிறாள். அவள் உலகம் களவாடப்படுவதை என்னைத் தவிர வேறு யார் தடுப்பார்கள்" என்று ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

காவிரிப் பிரச்னை, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போன விவகாரம், ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி எனத் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தினார், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. இதற்காக அவர்மீது திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் எட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இந்த நிலையில், அந்த வழக்குகளையெல்லாம் ரத்து செய்யக்கோரி, திருமுருகன் காந்தி சார்பில் தனித்தனியே எட்டு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன. இந்த வழக்கில் அவருடைய, அனைத்து மனுக்களையும் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது, நீதிமன்றம்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

மேலும், "பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது திருமுருகன் காந்தி மீது காவல்துறை வழக்குத் தொடர அனைத்து முகாந்திரமும் இருக்கிறது. அவர்குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அவரைப் பின்னால் இருந்து யாரும் இயக்குகிறார்களா என முழுமையான விசாரணை நடத்த வேண்டும்" என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வேதனை கலந்த ஒரு பதிவை திருமுருகன் காந்தி பதிவிட்டுள்ளார்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

அதில், "என் பின்னணியில் என் மகளைத் தவிர வேறு யார் இருப்பார்கள்? அவளின் உலகம் களவாடப்படுவதை என்னைத் தவிர வேறு யார் தடுப்பார்கள்? அவளின் நீர், நிலம், ஆறு, கடல், காற்றும் கார்ப்பரேட்டுக்கு விற்கப்பட்டு மாசுபடுவதை அப்பாவாக நான்தானே எதிர்க்க வேண்டும். அவள், அவளுடைய தலைமுறையின் உரிமைக்கான முகமே நான்" என்று பதிவிட்டுள்ளார்.