Published:Updated:

``இது ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் பட்ஜெட்..!" - பாஜக தொண்டர்களிடம் பிரதமர் உரை

பிரதமர் மோடி

`இந்த பட்ஜெட் அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்படுகிறது. இது ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் பட்ஜெட்.' - பிரதமர் மோடி.

``இது ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் பட்ஜெட்..!" - பாஜக தொண்டர்களிடம் பிரதமர் உரை

`இந்த பட்ஜெட் அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்படுகிறது. இது ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் பட்ஜெட்.' - பிரதமர் மோடி.

Published:Updated:
பிரதமர் மோடி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய மோடி, ``மத்திய பட்ஜெட் இந்தியாவை வளர்ச்சியின் பக்கம் அழைத்துச்செல்லும். இந்த பட்ஜெட் அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்படுகிறது. இது ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் பட்ஜெட்.

ஏழைகளுக்கு 48 ஆயிரம் கோடியில் 80 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நவீன இந்தியா சுயசார்பு இந்தியாவாக மாற வேண்டும்.

பட்ஜெட் தாக்கல்  நிதி அமைச்சர்...
பட்ஜெட் தாக்கல் நிதி அமைச்சர்...
Press Information Bureau

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்பு உலகம் மிகப்பெரும் மாற்றத்தைச் சந்திக்கவிருக்கிறது. வேறுபட்ட கோணத்தில் இந்தியாவை உலக நாடுகள் கவனிக்கத் தொடங்கிவிட்டன. எனவே நாம் வளர்ச்சியை நோக்கி உழைக்க வேண்டும்.

நாட்டைப் பாதுகாக்க ஆயுதப்படை உழைத்துவருகிறது. எனவே, எல்லையோர கிராமங்களுக்கும் வளர்ச்சியைக் கொண்டுவருவோம். அதற்காக அங்கு என்.சி.சி அமைப்பு ஏற்படுத்தப்படும். சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். கங்கையில் ரசாயனம் கலப்பது தடுக்கப்படும். சர்வதேச வேளாண் சந்தையில் இந்தியா நுழைய வேண்டும். மொபைல், விளையாட்டுத்துறையில் இந்தியா மிகப்பெரும் சந்தையாகத் திகழ்கிறது" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism