Published:Updated:

`திட்டங்கள் மீதல்ல...கமிஷன் மீதுதான் இவர்கள் கவனம் இருக்கிறது!' - சாடும் தி.மு.க எம்.எல்.ஏ

2014க்குப் பிறகு இந்த அரசு நிதி மேலாண்மை, மற்றும் நிர்வாகத் திறன் பெரும் அளவு குறைந்து பீகார் போன்ற மாநிலங்கள் போல் உள்ளது.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

``திட்டங்களில் கவனம் செலுத்தவில்லை, கமிஷனில்தான் கவனம் செலுத்துகின்றனர்" என ஆளும் கட்சியினர் மீது தி.மு.க., எம்.எல்.ஏ குற்றச்சாட்டு.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி சிறந்த எம்.எல்.ஏ. என்ற பெயரைப் பெற்று செயல்பட்டுவருகிறார். இந்நிலையில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சாலைப் பணி உள்ளிட்ட திட்டங்களை தொடங்கிவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல் தியாகராஜன், ``மதுரை மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை என்று கூறும் நபர்கள், உண்மை நிலவரத்தை அறியாதவர்கள். முல்லை பெரியாறு மூலம் வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு வழங்கப்படும் நீரில் முறைகேடு நடந்து வருகின்றது. வைகை அணையில் எப்போதும் தண்ணீர் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ptr
ptr

குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறுவதில்லை. அதற்கு என ஒதுக்கப்பட்ட நிதிகள் எங்கே செல்கின்றன எனத் தெரியவில்லை. எந்தத் திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தாமல், கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் போன்றவற்றில்தான் கவனம் செலுத்துகின்றனர்.

2014க்குப் பிறகு இந்த அரசு நிதி மேலாண்மை, மற்றும் நிர்வாகத் திறன் பெரும் அளவு குறைந்து பீகார் போன்ற மாநிலங்கள் போல் உள்ளது.

பழனிவேல்
பழனிவேல்

தற்போது மதுரை வைகையாற்றில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டு, இரு கரைகளிலும் சாலை அமைக்கும் திட்டம் சிறப்பான திட்டம்தான். ஆனால், அதை முழுமைப்படுத்துவார்களா என்று பின்னர்தான் தெரியும்'' என்றார்.