Published:Updated:

`இது ஒன்றும் கோவா அல்ல; மகாராஷ்டிரா!’- கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அணிவகுப்பில் சரத் பவார் #WeAre162

சரத் பவார்

இந்திய ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #WeAre162 என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.

`இது ஒன்றும் கோவா அல்ல; மகாராஷ்டிரா!’- கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அணிவகுப்பில் சரத் பவார் #WeAre162

இந்திய ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #WeAre162 என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.

Published:Updated:
சரத் பவார்

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில் இந்தக் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. சிவசேனாவின் சில கோரிக்கைகளை ஏற்க பா.ஜ.க தயக்கம் காட்டியதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவியது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாததால் அவர்களும் மௌனம் காத்தனர். சிவசேனா முதல்வர் நாற்காலிக்குக் குறிவைத்தது. இதன்காரணம் பா.ஜ.க , சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தியது.

பட்னாவிஸ் - அஜித் பவார்
பட்னாவிஸ் - அஜித் பவார்
ANI

இதற்கிடையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சிவசேனா தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளதாக தகவல் வந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏவும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் ஆதரவுடன் பா.ஜ.க மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள் என்கிறார் சரத் பவார். ஆனால், அஜித் பவார் ஆதரவில் ஆட்சியைப் பிடித்துவிட்டது பா.ஜ.க. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் அணிவகுப்பு நடத்துகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டது சிவசேனா. இந்த அணிவகுப்பில் சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்பட்டது. இதற்காக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேருந்து மூலம் தனியார் ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் உரையாற்றினர்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், “ நாம் இங்கு 162 பேர் இல்லை அதை விட அதிகமாக இருக்கிறோம். நாம் அனைவரும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்போம். பா.ஜ.கவைத் தடுத்து நிறுத்த இந்தக் கூட்டணியை அனுமதித்த சோனியா காந்திக்கு நான் நன்றி கூறுகிறேன். ஆட்சியமைக்க ஆளுநர் எங்களுக்கு அழைப்புவிடுக்க வேண்டும்” என்றார்.

இதன்பின்னர் பேசிய உத்தவ் தாக்கரே, ``எங்கள் சண்டை அதிகாரத்திற்கு மட்டுமல்ல, 'சத்யமேவ் ஜெயதே’ என்ற வாய்மையை வெல்ல வைப்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். எங்களை நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உடைக்க முயற்சசெய்தாலும் நாங்கள் அதைவிட அதிகமாக ஒன்றுபடுவோம்” எனக் கூறினார்.

சரத் பவார் பேசுகையில், ``நாம் அனைவரும் மகாராஷ்டிரா மக்களின் நலனுக்காக இங்கே ஒன்றிணைந்துள்ளோம். பெரும்பான்மை இல்லாத அரசு இங்கே ஆட்சி அமைத்துள்ளது. கர்நாடகா, கோவா, மணிப்பூர் ஆகிய இடங்களில் பா.ஜ.கவுக்குப் பெரும்பான்மை இல்லை. ஆனால், எப்படியோ ஆட்சி அமைத்துவிட்டார்கள். பெரும்பான்மை நிரூபிப்பதில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 162-க்கும் அதிகமான எம்.எல்.ஏக்களை அழைத்து வருவேன். இது கோவா அல்ல; இது மகாராஷ்டிரா” எனப் பேசினார்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

இதன்பின்னர் அங்கு கூடியிருந்த காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் , ``சரத்பவார், உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி தலைமையில் நான் என் கட்சிக்கு உண்மையாக இருப்பேன். நான் எதற்கும் விலை போக மாட்டேன். பா.ஜ.கவுக்கு ஆதாயம் தரும் எதையும் நான் செய்ய மாட்டேன் “ என அனைவரும் கைகளை நீட்டி சத்தியப்பிரமாணம் செய்தனர். எம்.எல்.ஏக்கள் கூடியிருந்த இடத்தில் WE ARE 162 என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. நாங்கள் 162 பேர் ஒன்றாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதாக இது இருந்தது. இந்தியா ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் #WeAre162 என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.