Published:Updated:

``இது உ.பி அல்ல; இங்கு லவ் ஜிகாத் செய்யவில்லை" - சிறுமி இறப்பு விவகாரம் குறித்து மம்தா காட்டம்

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதல்வர் மம்தா பேசியிருக்கிறார்.

``இது உ.பி அல்ல; இங்கு லவ் ஜிகாத் செய்யவில்லை" - சிறுமி இறப்பு விவகாரம் குறித்து மம்தா காட்டம்

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதல்வர் மம்தா பேசியிருக்கிறார்.

Published:Updated:
மம்தா பானர்ஜி

மாணவி உயிரிழப்பு:

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, கடந்த 5-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் தந்தை, கடந்த 10-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சமர் கோவாலாவின் மகன் முக்கியக் குற்றவாளி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் சமர் கோவாலாவின் (Samar Goala) மகன் பிரஜ் கோபால் கோவாலாவை (21) (Braj Gopal Goala) போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

மாணவி கடந்த வாரம் அந்தப் பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோவாலாவின் மகன் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றுள்ளார். விழா முடிந்து வீடு திரும்பிய மாணவி உடல்நலம் சரியில்லாமல் காணப்பட்டிருக்கிறார். மேலும் மாணவிக்கு கடும் ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, மாணவியின் இறுதிச் சடங்கை அவசரமாக முடிக்க மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மம்தா பேச்சு:

சிறுமி இறந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``சிறுமி 5-ம் தேதி இறந்த செய்தி, காவல்துறையினருக்கு 10-ம் தேதிதான் தெரியவந்துள்ளது. சிறுமி 5-ம் தேதி இறந்திருந்தால் அவர்கள் சம்பவத்தன்று ஏன் காவல்துறைக்குப் புகார் தெரிவிக்கவில்லை. உடலை எரித்த பிறகு காவல்துறையினருக்கு ஆதாரங்கள் எங்கே கிடைக்கும்... இவர்கள் இருவரும் காதலித்துவந்தார்கள். அவர்கள் காதலித்த விஷயம் அவர்களின் குடும்பத்தாருக்கும் தெரியும்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இருவர் காதலித்துவந்தால் அதை நான் எப்படித் தடுத்து நிறுத்த முடியும்... இது உ.பி அல்ல, நாங்கள் இங்கு லவ் ஜிகாத் செய்யவில்லை. இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எங்கு குற்றம் நடந்தாலும் குற்றவாளிகளை காவல்துறையினர் கைதுசெய்வார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள். காலையில் என்ன தலைப்பில் செய்தி வர வேண்டும் என்று பாஜக முடிவு செய்கிறது. அதைச் செய்தி சேனல்கள் பின்பற்றுகின்றன" என்று பேசியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெற்றோர்கள் குற்றச்சாட்டு:

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பேசும்போது, `` என் மகள் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி, சமர் கோவாலாவின் மகன் அழைத்ததால் அவரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றாள். என் மகனும் அவனும் காதலித்துவந்தார்கள். விழாவுக்குச் சென்ற என் மகளை மாலை 7:30 மணி போல இரண்டு பெண்களும், ஓர் ஆணும் வந்து காரில் இறக்கிவிட்டுச் சென்றதாக என் மனைவி தெரிவித்தார். வீடு திரும்பிய என் மகளுக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதிகாலையில் அவளின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துகொண்டிருந்தோம். அதற்குள் அவள் இறந்துவிட்டாள். என் மகள் சமரின் மகனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள்" என்று பேசியிருந்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
மாதிரி படம்

மாணவியின் தாயார் பேசும்போது, ``பிறந்தநாள் விழாவுக்கு மாலை 4 மணியளவில் என் மகளை அழைத்துச் சென்றார்கள். என் மகளைச் சமர் கோவாலாவின் மகன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். அன்று மாலை என் மகளை விட்டுச் செல்ல வந்தவர்கள் இது குறித்து வாயைத் திறந்தால் வீட்டைக் கொளுத்திவிடுவோம் என்று மிரட்டினார்கள். அதனால்தான் நாங்கள் எதுவும் செய்யவில்லை. என் மகளை இப்படிச் செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரவேண்டும்" என்று கூறியிருந்தார்.

பாஜக கண்டனம்:

இறந்த மாணவிக்கு நீதி கேட்டு திங்கள் கிழமை 12 மணிநேர பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. மேலும், பாஜக தலைவர் அர்ச்சனா மஜூம்தார் (Archana Majumder) பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதலைத் தெரிவித்தார். மேலும் பாலியல் வன்கொடுமை காரணமாக 14 வயது சிறுமி இறந்த விவகாரம் மேற்கு வங்கம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி மரணம் தொடர்பாக மம்தா பேசியதற்கு பதிலாக, ``14 வயது சிறுமி கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பதைச் சிறுமைப்படுத்துகிறார் முதல்வர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இது காதல் விவகாரமா அல்லது திட்டமிடப்படாத கர்ப்பமா என்று கேட்கிறார். காரணம் அவர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரின் மகன் என்பதால்தான்" என்று பாஜக-வைச் சேர்ந்த அமித் மாள்வியா (Amit Malviya) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism