Published:Updated:

`இது தோழமை சுட்டுதல்; என்றாலும் அதிர்ச்சி அளிக்கிறது!’ -தொல். திருமாவளவன் வேதனை

திருமாவளவன்
திருமாவளவன்

1 லட்சம் மனுக்களை பொறுத்தமட்டில் அரசுத் துறைகள் மூலம்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்பதால் அந்த மனுக்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தும்படி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கொரோனா ஊரடங்களில் மக்களின் கோரிக்கைகளை தொலைபேசி வாயிலாக பெற்று அவர்களுக்குத் தேவையான உதவிகளை அந்த அந்த மாநில நிர்வாகிகள் மூலம் செய்து கொடுக்கும் வகையில் தி.மு.க சார்பில் தொடக்கப்பட்டது `ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம்.

ஒன்றிணைவோம் வா
ஒன்றிணைவோம் வா

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டதாக தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், 14 லட்சம் பேருக்குத் தேவையான உதவியை கட்சி நிர்வாகிகள் செய்தனர். மீதமுள்ள 1 லட்சம் மனுக்களை பொறுத்தமட்டில் அரசுத் துறைகள் மூலம்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்பதால் அந்த மனுக்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தும்படி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 13-ம் தேதி எம்.பி-க்கள் கலாநிதி, தமிழச்சி தங்கப்பாண்டியன் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து மனுக்களை வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தி.மு.க உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பி வைத்துள்ள பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றனர். அப்போது பேசுகையில், `நாங்கள் என்ன `தாழ்த்தப்பட்டவர்களா?’ என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சை ஆனது.

`இது தோழமை சுட்டுதல்; என்றாலும் அதிர்ச்சி அளிக்கிறது!’ -தொல். திருமாவளவன் வேதனை

இந்த நிலைலையில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சி தலைவரான திருமாவளவன், இது தொடர்பாக ட்விட்டரில் வேதனை தெரிவித்து இருந்தார். அதில், ``தலைமைச்செயலாளர் குறித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அந்த வேகத்தில் `நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா' என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல்’’ எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், ``தமிழக அரசின் தலைமைச் செயலாளரைச் சந்தித்தது குறித்து நான் அளித்த பேட்டியின்போது, தலைமைச் செயலாளர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில்தான் கூறியிருந்தேனே தவிர எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ட்விட்டரில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு