Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தகவல்கள் கசிந்தது எப்படி?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

``விசாரணை ஆணையத்தின் அறிக்கை யார் மூலமாக வெளியாகிறது என்பது முக்கியமில்லை. வெளியான தகவல் உண்மையாக இருக்கிறதா என்பது முக்கியமாகும். இந்திய அளவில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் பெரும்பாலும் வெளியிடப்படுவதே இல்லை”

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தகவல்கள் கசிந்தது எப்படி?

``விசாரணை ஆணையத்தின் அறிக்கை யார் மூலமாக வெளியாகிறது என்பது முக்கியமில்லை. வெளியான தகவல் உண்மையாக இருக்கிறதா என்பது முக்கியமாகும். இந்திய அளவில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் பெரும்பாலும் வெளியிடப்படுவதே இல்லை”

Published:Updated:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்து போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பூதாகரமாகியது. இதன்காரணமாக, துப்பாக்கிச் சூடு தொடர்பாக அப்போதைய அ.தி.மு.க அரசு விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.

அருணா ஜெகதீசன் - ஆணையத்தின் நீதிபதி
அருணா ஜெகதீசன் - ஆணையத்தின் நீதிபதி

அதன்படி, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி விசாரணை ஆணையம் தனது விசாரணை தொடங்கியது. அதற்காக, தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அண்ணாநகர், திரேஸ்புரம், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு உள்ளிட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற இடங்களில் கள ஆய்வு நடத்தப்பட்டது. அதேபோல, சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சியங்களை முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, சம்பவத்தில் தொடர்புடைய 1,426 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, அதில் 1,048 பேர் நேரிலும், மீதமுள்ளவர்கள் ஆவணங்கள் சமர்பித்தும் விளக்கமளித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் 36 கட்ட விசாரணை செய்யப்பட்டு சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே 18-ம் தேதி தாக்கல் செய்தார். ஆனால், விசாரணையில் யார் மீது தவறு என்பது மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டியிருந்தது.

முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்த அருணா ஜெகதீசன்
முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்த அருணா ஜெகதீசன்

இந்நிலையில், நிராயுதபாணியான பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி இருப்பதாகக் கண்டித்ததோடு, அந்த நேரத்தில் பொறுப்பு வகித்த தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரட்கார், தூத்துக்குடி எஸ்.பி., மகேந்திரன், உதவி எஸ்.பி லிங்கத் திருமாறன், மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமைக் காவலர் மற்றும் ஏழு காவலர்கள் இவர்கள்தான் கலவரத்திற்குப் பொறுப்பு என்று அறிக்கையில் கூறப்பட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகி, தலைமை செயலகத்தையே பரபரப்பாக்கியிருக்கிறது.

வெங்கடேஷ், மகேந்திரன், சைலேஷ்குமார் யாதவ், கபில்குமார் சரட்கார்
வெங்கடேஷ், மகேந்திரன், சைலேஷ்குமார் யாதவ், கபில்குமார் சரட்கார்

இதுதொடர்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் ச.பாலமுருகனிடம் கேட்டபோது, ``விசாரணை ஆணையத்தின் அறிக்கை யார் மூலமாக வெளியாகிறது என்பது முக்கியமில்லை. வெளியான தகவல் உண்மையாக இருக்கிறதா என்பது இன்னும் முக்கியமாகும். தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் பெரும்பாலும் வெளியிடப்படுவதே இல்லை. விசாரணை ஆணைய சட்டத்தின் படி, அறிக்கையை 6 மாதங்களுக்குள் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தாக்கல் செய்யப்படவேண்டும் என்ற விதிமுறையைப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மத்திய அரசு திருத்தம் செய்துவிட்டது.

ச.பாலமுருகன்
ச.பாலமுருகன்

இதனால், விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வெளியிடுவது கட்டாயமில்லை என்று ஆகிவிட்டது. ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்து 2 ஆண்டுகள் ஆகியும், அரசு இன்னும் அதைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவில்லை. இதேபோல, ஏராளமான விசாரணை ஆணைய அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் ஆணைய அறிக்கை வெளியாகவில்லை என்றால், அதுவும் கிடப்பில் போடப்பட்டியிருக்கும். துப்பாக்கிச் சூட்டில் குற்றம்சாட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் " என்றார்.

இதுகுறித்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், ``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை ஆணையத்துக்கு எல்லா உதவிகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாகச் செய்திருந்தது. அதன்படி, விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிட்டோம்.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்

அதற்குள் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அரசு தரப்பில் இந்த அறிக்கை மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டியிருக்கிறது. எனவே, இங்கிருந்து அறிக்கை வெளியாக வாய்ப்பு இல்லை. விசாரணை ஆணையத்திலிருந்துகூட அறிக்கை வெளியாகியிருக்கலாம். அரசின் பாதுகாக்கப்பட்ட ஆணைய அறிக்கையை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்" என்று முடித்துக் கொண்டார்.

அறிக்கை தகவல்கள் கசிந்தது தொடர்பாக ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகரை முன்னர் தொடர்பு கொண்டு பேசிய போது , ``அறிக்கை தகவல்கள் கசிந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஆனால், ஆணையம் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. அதற்கு மேல் எங்களுக்கு எதுவும் தெரியாது” என்பதோடு முடித்துக்கொண்டார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ``தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் ரகசிய அறிக்கை கசிந்தது எப்படி?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

அறிக்கையில் இருப்பதாக வெளியான தகவல் உண்மையெனில், துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.