Published:Updated:

காளி போஸ்டர் விவகாரம்: ``இந்துக்களை அவமதிப்பவர்களைத் தூக்கிலிட வேண்டும்!" - கே.எஸ்.ஈஸ்வரப்பா

கர்நாடக முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

``நுபுர் ஷர்மா கருத்து தெரிவித்தபோது, உலகெங்கும் இருக்கும் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தது போல இந்துக்களும், தங்களின் கடவுள்களை அவமதித்ததற்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும்." - கே.எஸ்.ஈஸ்வரப்பா

காளி போஸ்டர் விவகாரம்: ``இந்துக்களை அவமதிப்பவர்களைத் தூக்கிலிட வேண்டும்!" - கே.எஸ்.ஈஸ்வரப்பா

``நுபுர் ஷர்மா கருத்து தெரிவித்தபோது, உலகெங்கும் இருக்கும் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தது போல இந்துக்களும், தங்களின் கடவுள்களை அவமதித்ததற்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும்." - கே.எஸ்.ஈஸ்வரப்பா

Published:Updated:
கர்நாடக முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

சமீபத்தில் வெளியான இயக்குனர் லீனா மணிமேகலையின் `காளி' எனும் டெலி ஃபிலிமின் போஸ்டருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த போஸ்டரில், இந்துக் கடவுளான காளி சிகரெட் பிடிப்பது போன்று இருக்கும் காட்சி, இந்துக்களை அவமதிக்கும் விதமாக உள்ளது எனவும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்துக்களை அவமதிப்பவர்களைத் தூக்கிலிட வேண்டும் என கர்நாடக முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்திருக்கிறார்.

காளி பட போஸ்டர்
காளி பட போஸ்டர்
ட்விட்டர்

`காளி' டெலி ஃபிலிமின் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய ஈஸ்வரப்பா, ``நம்முடைய எல்லா மரியாதைக்குரிய மையமாக காளி மாதா இருக்கிறார். காளி மாதா இந்தியக் கலாசாரத்தின் ஓர் அடையாளம். ஆனால், இன்று டெலி ஃபிலிமுக்காக காளி மாதா சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டரை ஒருவர் தயாரித்திருக்கிறார். இதனால் நாடு முழுவதும் உள்ள இந்து மக்கள் கோபத்தில் உள்ளனர். எனவே அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். நபிகள் நாயகத்துக்கு எதிராக நுபுர் ஷர்மா கருத்து தெரிவித்தபோது, உலகெங்கும் இருக்கும் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தது போல, இந்துக்களும் தங்களின் கடவுள்களை அவமதித்ததற்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்துக்களை இழிவுபடுத்துபவர்களைத் தூக்கிலிட வேண்டும் அல்லது தோட்டாக்களால் தண்டிக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லீனா மணிமேகலை
லீனா மணிமேகலை

முன்னதாக `காளி' போஸ்டருக்கு எதிராகப் பல எதிர்ப்புகள் வந்ததையடுத்து, அதன் இயக்குநர் லீனா மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில், ``எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. நான் வாழும் காலம் வரை, நான் நம்புவதை அச்சமின்றி பேசும் குரலுடன் வாழ விரும்புகிறேன். அதற்கான விலை என் உயிராக இருந்தால், அதையும் என்னால் கொடுக்க முடியும்" என ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.