மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டது தொடர்பாக பா.ஜ.க விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, ``மா, மாதி, மனுஷ் (தாய், தாய்நாடு, மக்கள்) என முழக்கம் எழுப்பியவர்கள், இன்று உச்சரிக்கும் ஒரே ஒரு வார்த்தை பணம்...பணம்... பணம்! நாமெல்லாம் ஆச்சர்யப்படும்விதமாக, ஒரு பெரிய பணத்தொகை மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி ஜி இது தொடர்பாக நீண்ட மௌனம் காக்கிறார்.
இது மட்டுமில்லாமல், 2014-ல் ஒரு பல்கலைக்கழகத்தில் பார்த்தா சாட்டர்ஜியால் பணம் பெற்றுக்கொண்டு பணியமர்த்தப்பட்ட மோனாலிசா தாஸ் என்பவர் இன்று அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பெங்காலி துறைத் தலைவராகவும் இருக்கிறார். இப்போது அவர் பெயரில் 10 பிளாட் பேப்பர்கள் இருக்கின்றன. அர்பிதா முகர்ஜியின் இரண்டு அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பார்த்தா சாட்டர்ஜி தன்னுடைய வீட்டை மினி வங்கியாகப் பயன்படுத்தினார் என்றும், பணம் கீழிருந்து மேல் செல்லும் என்றும் அர்பிதா முகர்ஜி தெரிவித்திருக்கிறார். நடந்தவை அனைத்தும் வெளிச்சத்துக்கு வர வேண்டும்" என்றார்.