Published:Updated:

``மக்களிடம் நேரடியாகச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது'' - புதுக் கணக்கு போடும் பிரசாந்த் கிஷோர்?

பிரசாந்த் கிஷோர்

``மக்களிடம் நேரடியாகச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது'' என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

``மக்களிடம் நேரடியாகச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது'' - புதுக் கணக்கு போடும் பிரசாந்த் கிஷோர்?

``மக்களிடம் நேரடியாகச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது'' என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்

பாஜக-வில் தொடங்கி காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், திமுக போன்ற பெரிய கட்சிகளுக்காகப் பணியாற்றி, அக்கட்சிகளின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பெரும் பங்காற்றினார். இதற்கிடையே, பிரசாந்த் கிஷோர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாகத் தகவல் வெளியானது. அதை அவர் மறுத்துவிட்டர். மேலும், தன்னைவிட காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைமைதான் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து பிரசாந்த் கிஷோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணத்தை அறிவிக்கவிருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பதிவில், ``பிரச்னைகளை நன்றாகப் புரிந்துகொள்ள உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களைச் சந்திக்கவிருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

மேலும் அவர் பீகார் மாநிலத்தை மையமாகவைத்து அரசியல் கட்சியைத் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism